ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில், அடர்ந்த வனப்பகுதியில் சுயம்புவாக வீற்றிருக்கிறார் அருள்மிகு பண்ணாரியம்மன். இந்த பண்ணாரியம்மன் கோவில், பக்தர்களுக்கு திருநீற்றுக்கு பதிலாக புற்று மண்ணையே பிரசாதமாக வழங்கும் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது.
மலைகளுக்குள் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட புற்று மண், சுயம்பு அம்மனிடத்தில் பூஜை செய்யப்பட்டு, சக்தி வாய்ந்த திருநீறாக வழங்கப்படுகிறது. பண்ணாரியம்மன் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பது, வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு தனித்தன்மையாகும். கேட்ட வரங்களை வாரி வழங்கும் சக்தி வாய்ந்த தெய்வமாக பண்ணாரியம்மன் போற்றப்படுகிறார்.
புகழ்பெற்ற குண்டம் திருவிழா :
பண்ணாரியம்மன் கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா ஆகும். இந்த விழாவின்போது, தொடர்ந்து 12 மணி நேரம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதிப்பது தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டுமே நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
தரிசன நேரம் :
திருமணத் தடை, குழந்தையின்மை மற்றும் பிற பிரச்சனைகளுக்காக பக்தர்கள் இங்கு வந்து வேண்டிச் சென்றால், அந்தப் பிரச்சனைகள் நீங்கி வாழ்க்கை சிறக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஷோபனா மண்டபம் போன்றவற்றுடன், தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கலைநயத்துடன் அமைந்துள்ளது.
பண்ணாரியம்மன் கோவில் பொதுமக்களின் தரிசனத்திற்காக காலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும். இங்கு கலசந்தி (காலை 5.30 மணி), உச்சகாலம் (மதியம் 12.00 மணி), சாயரட்சை (மாலை 5.30 மணி), மற்றும் அர்த்தசாமம் (இரவு 8.30 மணி) என நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் திருவிளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் திரளாக பங்கேற்பது வழக்கமாகும்.
Read More : அலெர்ட்!. அக்டோபர் 1 முதல் 8 முக்கிய விதிகளில் மாற்றம்!. என்னென்ன தெரியுமா?