ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான போஸ் (Bosch), தனது செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், உலகளவில் சுமார் 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த முடிவுக்கு, வாகன உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவும், இதற்கு முக்கிய காரணமாக டிரம்ப் விதித்துள்ள கூடுதல் வரிகளும் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே டெஸ்லா மற்றும் பிஒய்டி (BYD) போன்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதே பொருளாதார சரிவை ஈடுகட்ட ஆள்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், தற்போது போஸ் நிறுவனமும் இந்த நடவடிக்கையை கையிலெடுத்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து, உலக நாடுகளுடனான வர்த்தக உறவுகளில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக, இந்தியாவுடனான நட்பு நாடுகள் உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் சூழலில், டிரம்ப் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுவது இந்திய அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை குறிவைத்து பல அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார். விசா விவகாரம் முதல் வரி உயர்வு வரை பல நெருக்கடிகளை இந்தியாவுக்கு கொடுத்துள்ளார். ஏற்கனவே இந்தியப் பொருட்களுக்கு 50% வரி உயர்வை விதித்து அழுத்தம் கொடுத்த நிலையில், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100% வரியும், சமையல் அலமாரி போன்ற பொருட்களுக்கு 50% வரியும் விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த தொடர் வரி விதிப்புகள், அமெரிக்கா உள்பட உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களின் உற்பத்தி செலவைக் கடுமையாக உயர்த்தியுள்ளன. டிரம்பின் இத்தகைய முடிவுகளால், அதிபராவதற்கு முன்பு அவருடன் நெருக்கமாக இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க் உள்ளிட்டோரே தற்போது அவருடன் கருத்து வேறுபாட்டில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Read More : ராமதாஸ் உயிருக்கு ஆபத்து..!! கொலை திட்டம் தீட்டிய அன்புமணி ஆதரவாளர்கள்..!! பகீர் கிளப்பிய பாமக MLA..!!