கோவையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மனிதவள அதிகாரியாக (HR) பணிபுரியும் ஒரு இளம்பெண், ஜிம்மில் ஏற்பட்ட அறிமுகம் காரணமாக தன் வாழ்க்கையில் பெரும் துயரத்தை சந்தித்துள்ளார். ஜிம்மில் சந்தித்த இளைஞரின் ‘காதல் வலையில்’ சிக்கி திருமணம் செய்துகொண்டு, கர்ப்பமான நிலையில், அந்த இளைஞரால் கைவிடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தங்கள் திருமணம் செல்லுபடியாகும் என்பதற்கான வீடியோ ஆதாரம் மற்றும் உடலுறவுக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தற்போது மீண்டும் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவலின்படி, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ‘ஸ்லாம் ஜிம்’ என்ற ஜிம்மில் ஒர்க்அவுட் செய்தபோதுதான் கிஷோர் என்ற இளைஞரை சந்தித்துள்ளார். “ஜிம்மில் தொடங்கிய எங்கள் பழக்கம், மார்ச் மாதம் முதல் காதலாக மாறியது. அவன் என்னிடம் காதலை தெரிவித்தான். ஏப்ரல்-மே மாதங்கள் வரை ஜிம்மில் தொடர்ந்து சந்தித்த அவர்கள், பின்னர் கிஷோர் தனது சொந்த ஊருக்கு சென்றபோது, அந்தப் பெண்ணும் அங்கு சென்றுள்ளார்.
அங்குள்ள ஒரு ஹோட்டல் அறையில் வைத்து கிஷோர் தனக்குத் தாலி கட்டியதாகவும், அதை திருமணமாகவே தான் நம்பியதாகவும் அந்தப் பெண் விளக்கமளித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு, கிஷோர் தொடர்ந்து தன்னுடன் உடலுறவில் இருக்க வற்புறுத்தியதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், சிறிது காலத்திலேயே கிஷோர், “இப்போது வேண்டாம், எனக்கு வேறு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது” என்று கூறித் தன்னை கைவிட்டுவிட்டதாக அவர் கண்ணீர் மல்க கூறுகிறார். இதனால் தான் கருத்தரித்தபோது, கிஷோரின் குடும்பத்தினர் கருக்கலைப்பு செய்யுமாறு வற்புறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தையிடம் தெரிவித்தபோது, குடும்பத்தினர் தங்கள் சமூகம் மூலம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுள்ளனர். ஆனால், கிஷோரின் குடும்பத்தினர் தங்களை மிகவும் அவமானப்படுத்தி கொடூரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அனுப்பியதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.
இதையடுத்து, கோவை ஆணையர் அலுவலகத்தில் கிஷோர் மற்றும் அவரது அக்கா யாழினி மீது அவர் புகார் அளித்தார். ஆனால், விசாரணைக்கு கிஷோரும், அவரது தந்தையும் மட்டுமே வந்துள்ளனர். இதற்கிடையே, தன்னிடம் திருமண வீடியோ, உடலுறவு வீடியோக்கள் மற்றும் வாய்ஸ் ரெக்கார்டிங்குகள் போன்ற அனைத்து ஆதாரங்களும் இருந்தும், காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய யோசித்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
விசாரணையில், கிஷோரிடம் ‘உனக்குத் திருமணம் செய்ய இஷ்டம் இல்லையா?’ என்று கேட்காமலேயே, உன் மீதுதான் தவறு என்று சொன்னார்கள். என் ஆதாரங்களைப் பார்க்கவே அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் ஏற்கனவே பேசி வைத்துவிட்டு வந்தது போல தெரிந்தது. இதனால், அவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Read More : ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Bosch நிறுவனம்..!! 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவிப்பு..!!