டேய்.. சீக்கிரம் வாடா..!! சிறுவன் மீது வந்த விபரீத ஆசை..!! அடிக்கடி உல்லாசம் அனுபவித்த இளம்பெண்..!! கடைசியில் எதிர்பாரா ட்விஸ்ட்..!!

Sex 2025 1

ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் ஒரு திருமணமான 24 வயதுப் பெண், மைனர் சிறுவனுக்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில், அந்தப் பெண்ணே தன்னைப் பாதிக்கப்பட்டவர் போல் காட்டிக்கொண்டு, அந்த சிறுவன் மீது பொய்யான பாலியல் புகாரைப் பதிவு செய்திருந்தார். ஆனால், காவல்துறையின் விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.


காவல் நிலைய அதிகாரி லட்சுமண் சுதார் அளித்த தகவலின்படி, 2 மாதங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்குப் பிறகுதான் இந்த உண்மை தெரியவந்துள்ளது. அந்த பெண்ணே மைனர் பையனுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்த சிறுவன் அவருடைய கோரிக்கைகளை ஏற்க மறுத்தபோது, அந்தப் பெண் அவனை மிரட்ட தொடங்கியுள்ளார்.

இதன் உச்சகட்டமாக, சிறுவனிடம் பணம் கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளார். பணம் கிடைக்காததால், சிறுவனை பழிவாங்கும் நோக்கில் அவன் மீது பொய்யான பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தபோதுதான் இந்த சதி வெளிச்சத்துக்கு வந்தது.

அந்தச் சிறுவனின் தாய் கூறுகையில், அந்தப் பெண் தன் மகனை துன்புறுத்தியது மட்டுமல்லாமல், அவனது வங்கிக் கணக்கில் பணத்தை எடுத்ததாகவும், ரூ.10,000 மதிப்புள்ள ஒரு புதிய ஃபோன் வாங்கியதாகவும் குற்றம் சாட்டினார். காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கின் விசாரணையின்போது, அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்று தெரியவந்தது.

இதையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, குற்றவாளியான அந்த பெண்ணைக் கைது செய்தனர். பின்னர், அவர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : நடிகர் தாடி பாலாஜிக்கு என்ன ஆச்சு..? ICU-வில் அனுமதி..!! உடனே ஃபோன் போட்ட விஜய்..!!

CHELLA

Next Post

AI ஆல் விரைவில் 40% வேலைகள் காலி.. 2030-க்குள் சூப்பர் இன்டலிஜென்ஸ் வரக்கூடும்: சாம் ஆல்ட்மேன் தகவல்..

Sat Sep 27 , 2025
செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் AI ஆல் பல லட்சம் பேர் வேலையை இழக்கக்கூடும் என்று நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.. AI மனித வேலைகளை மாற்றுமா என்பது OpenAI இன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டு ஆக்செல் ஸ்பிரிங்கர் விருதைப் பெற்ற பிறகு பேசிய ஆல்ட்மேன், செயற்கை நுண்ணறிவு மிக வேகமாக முன்னேறி வருவதாகவும், ஒரு காலத்தில் அறிவியல் புனைகதைகளுக்காக […]
ai sam altman

You May Like