தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று இரவு கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடம் உரையாற்றினார். விஜய் வருகையை நோக்கி பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர். கூட்டத்தின் போது கட்டுப்பாடுகள் இல்லாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது.
விழாவின் நடுவே, ஒரு பெண் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நிகழ்ச்சி முடிந்து விஜய் வெளியேறியதும்,கூடியிருந்த மக்கள் கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து வந்த தகவல்களில், 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மற்றொரு கட்ட தகவலின் படி, ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதிப்படுத்தினார். தற்போது கூடுதலாக பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்றாவது கட்டத்தில் வரும் தகவல்களின் அடிப்படையில், 6 குழந்தைகள், 16 பெண்கள் 9 ஆண்கள் உட்பட 33 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு எனக் கூறப்படுகிறது. இந்த தகவலை அமைச்சகர் மா. சுப்பிரமணியம் உறுதிப்படுத்தியுள்ளார். இதில் மேலும், 12 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த 33 பெரும் உயிரிழந்த பிரகு தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். யாரு சிகிச்சை பலனிக்காமல் உயிரிழக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிலவும் அதீத குழப்பமான சூழ்நிலையால், நிகழ்விடம் அருகே கூடியிருந்த மக்களை காவல்துறையினர் தடியடி செய்து பரபரப்பை கட்டுப்படுத்த முயன்றுள்ளனர். இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அதிகாலை நேரில் கரூருக்குச் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.