நவராத்திரி பூஜையில் அசைவ விருந்து படைக்கும் மக்கள்..!! எங்கு தெரியுமா..?

Navarathri 2025

ஆண்களுக்கு ‘ஒரே ராத்திரி சிவராத்திரி’ என்றும், பெண்களுக்கு ‘ஒன்பது ராத்திரி நவராத்திரி’ என்றும் பழங்காலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த கொண்டாட்டத்தின்போது, 9 நாட்கள் கொலு வைத்து வழிபடுவது பொதுவாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடைபிடிக்கப்படுகிறது.


மாநிலத்திற்கு மாநிலம் வழிபாட்டு முறைகள் வேறுபட்டாலும், பெரும்பாலான பகுதிகளில் அம்மனுக்கு இனிப்பு பலகாரங்கள் படைத்து, 9 நாட்களும் சைவ உணவை மட்டுமே உண்ணும் விரதம் கடைபிடிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக தமிழ்நாட்டில் கொலு பொம்மைகள் வைத்தும், வட மாநிலங்களில் துர்கா தேவியை விசேஷமாக வழிபட்டும் கொண்டாடப்படுகிறது.

அசைவ விருந்து படைக்கும் மக்கள் :

இந்தியாவின் பிற பகுதிகளில் நவராத்திரி என்பது கடுமையான சைவ விரதத்தை உள்ளடக்கியிருக்கும் நிலையில், வங்காளத்தில் மட்டும் இந்த 9 நாட்களும் அசைவ உணவுகள் பரிமாறப்படுகிறது. இந்த கொண்டாட்ட முறைக்கு அங்கு காணப்படும் சில சுவாரஸ்யமான நம்பிக்கைகளே காரணமாக உள்ளன.

தாயின் இல்ல வருகை : துர்கா தேவி, 9 நாட்கள் தனது தாய் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளதாக நம்பப்படுகிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடும் விதமாக, வீட்டுக்கு வரும் மகளை உபசரிப்பது போல், பக்தியுடன் அசைவ விருந்து படைக்கப்படுவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

காளி பூஜையின் பிரசாதம் : காளி பூஜையின்போது அன்னைக்கு சிறப்பு பிரசாதமாக ஆட்டிறைச்சி மற்றும் மீன் வழங்கப்பட்டதாக பண்டைய கால நம்பிக்கைகள் உள்ளன. இதன் காரணமாகவே, வங்காள மக்கள் நவராத்திரி காலங்களில் அசைவ உணவுகளை படைப்பதை ஒரு சடங்காகவே வைத்திருக்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.

பண்டைய வங்காளச் சமூகத்தில், திருமணமான பெண்களின் உணவில் இறைச்சிக்கு ஒரு சிறப்பு இடம் இருந்தது. பாரம்பரியத்தின்படி, திருமணமான ஒரு பெண், மீன் மற்றும் அரிசி இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதற்கு நேர்மாறாக, விதவை பெண்கள் அசைவ உணவுகளை சாப்பிட அனுமதிக்கப்படவில்லை.

இப்படி, வங்காளத்தின் கலாச்சாரத்தில் அசைவ உணவு அதிக முக்கியத்துவம் பெறுவதாலேயே, மகிசாசுரனை வதம் செய்த துர்கா தேவிக்கு நவராத்திரி சமயத்தில் அசைவ உணவுகள் படையலிடப்படுவதாக கூறப்படுகிறது. இது மற்ற மாநிலங்களில் காணப்படும் விரத முறையில் இருந்து வங்காளத்தை முற்றிலும் மாறுபட்டதாக காட்டுகிறது.

Read More : சக்திவாய்ந்த புற்று மண் திருநீர்..!! தொடர்ந்து 12 மணி நேரம் தீமிதி திருவிழா..!! கேட்ட வரம் கொடுக்கும் பண்ணாரியம்மன்..!!

CHELLA

Next Post

பூஜையின் போது மணி அடிப்பதற்கு எதற்காக தெரியுமா..? இப்படி ஒரு அறிவியல் காரணமும் இருக்கா..?

Sun Sep 28 , 2025
இந்திய கலாச்சாரத்தில், ஒரு சிறிய வீட்டில் உள்ள பூஜை அறையாக இருந்தாலும் சரி, பிரம்மாண்டமான ஆலயமாக இருந்தாலும் சரி, வழிபாட்டின் தொடக்கத்தில் மணி அடிக்கும் சடங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பெரும்பாலானோர் இதை ஒரு மதப் பாரம்பரியமாக மட்டுமே கருதுகின்றனர். ஆனால், இந்த எளிய செயலுக்கு பின்னால், ஆன்மீக அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த நன்மைகள் அடங்கியுள்ளன. எதிர்மறை ஆற்றலை நீக்கும் அதிர்வு : மணி ஓசை என்பது ஒரு […]
Mani 2025

You May Like