செம குட் நியூஸ்..!! இனி லாகின் செய்யாமலேயே பிஎஃப் பேலன்ஸை செக் பண்ணலாம்..!! அசத்தலான அப்டேட் அறிமுகம்..!!

pf money epfo 1

மத்திய அரசின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), அதன் சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் இருப்பை சரிபார்க்கும் முறையை எளிமையாக்கும் வகையில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சந்தாதாரர்கள் தாங்கள் செலுத்திய மற்றும் நிறுவனம் பங்களித்த தொகையை மிக எளிமையான முறையில் தெரிந்து கொள்ளலாம்.


நீண்ட காலத்திற்கு பிஎஃப் கணக்கை சரிபார்க்காமல் இருந்தால், நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல் போகும் நிலை போன்ற சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால், கணக்கு இருப்பை சரிபார்ப்பது மிகவும் அவசியம். EPFO அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய அம்சம் ‘புதிய பாஸ்புக் லைட்’ (New Passbook Lite) என அழைக்கப்படுகிறது.

சந்தாதாரர்கள் இனி தனியாக லாகின் செய்ய வேண்டியதில்லை; நேரடியாக போர்ட்டலில் தங்கள் பிஎஃப் கணக்கு விவரங்களை பார்க்கலாம். இந்த புதிய அம்சம், ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய டிஜிட்டல் தளமான EPFO 3.0-ன் ஒரு பகுதியாகும்.

EPFO 3.0 தளத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அவசரகால சூழ்நிலைகளில் உறுப்பினர்கள் தங்கள் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பரை (UAN) ஆக்டிவேட் செய்து, வங்கிக் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பதன் மூலம், ஏடிஎம்கள் மற்றும் யுபிஐ மூலமாகவே நேரடியாக பிஎஃப் பணத்தை உடனடியாக வித்ட்ரா செய்துகொள்ள முடியும்.

கிளைம் நிலை மற்றும் திருத்தங்கள் : ஆன்லைனில் ஓடிபி சரிபார்ப்பு முறையை பயன்படுத்தி, தாங்கள் எழுப்பிய கோரிக்கையின் நிலை என்ன என்பதை சரிபார்க்கலாம். மேலும், சிறிய அளவிலான திருத்தங்களையும் மேற்கொள்ள முடியும்.

நாமினிகளுக்கான உதவி : சந்தாதாரர் மரணமடையும் பட்சத்தில், அதற்கு பிறகு நடக்கக்கூடிய கிளைம் செட்டில்மென்ட் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. கிளைம் நேரடியாக நாமினிகளுக்கு விரைவாக வழங்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உடனடிப் பொருளாதார ஆதரவு உறுதி செய்யப்படுகிறது.

Read More : மீளா துயரத்தில் கரூர்..!! இன்று முழுவதும் கடைகள் அடைப்பு..!! வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு..!!

CHELLA

Next Post

இந்தியப் புள்ளியியல் கழக மசோதா, 2025-ன் வரை...! சட்டம் இயற்ற கருத்து கேட்கும் மத்திய அரசு...!

Sun Sep 28 , 2025
மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், இந்தியப் புள்ளியியல் கழக மசோதா, 2025-ன் வரைவைப் பொதுமக்களின் கருத்துக்கேட்பிற்காக வெளியிட்டுள்ளது. முன்-சட்டமியற்றும் கலந்தாய்வு செயல்முறையின் ஒரு பகுதியாக அனைத்து பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துகளும் ஆலோசனைகளும் வழங்கலாம் என தெரிவித்துள்ளது. இந்தியப் புள்ளியியல் கழகம் டிசம்பர் 1931-ல் நிறுவப்பட்டது. அன்று முதல், இது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்கக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. 2020-ல் டாக்டர் ஆர்.ஏ. […]
Central 2025

You May Like