மரணத்துக்கு முன் மூளையில் என்ன நடக்கிறது என்ற மனித குலத்தின் நீண்டகால புதிருக்கு லூயிஸ்வில்லி யுனிவர்சிடியின் லேட்டஸ்ட் ஆய்வில் விடைக் கிடைதுள்ளது.
வாழ்க்கையின் முற்றுப்புள்ளிதான் மரணம். தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருந்துதான் ஆகவேண்டும் என்பது நியதி. பிறக்கும்போதே ஒவ்வொரு மனிதனுக்கும் ‘கவுண்ட்டவுன்’ தொடங்கிவிடுகிறது. ஆனால் மரண நாள் தெரியாததால் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக-நிம்மதியாக வாழ்கிறோம். இறுதி நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாட்கள் நரகமாகிவிடும் என்பதால்தான், மனிதனுக்கு தெரியாமல் கடவுள் அதை மறைத்து வைத்திருக்கிறார்.
‘இறப்பது வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பகுதி’ என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும், இறக்கும் தருவாயில் செயலிழக்கும் மூளையைப் பற்றி நமக்கு ‘கிட்டத்தட்ட ஒன்றும் தெரியாது. மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பது மனிதர்களுக்குப் புரிந்துகொள்ள முடியாத ஒரு மர்மமாகவே உள்ளது, ஆனால் மத நம்பிக்கைகளின்படி, ஆன்மா உடலை விட்டு வெளியேறி, மறுபிறவி எடுக்கலாம் அல்லது அழியாமல் வேறொரு நிலையை அடையலாம், அதே சமயம் உடல் செயல்முறைகள் மற்றும் உடல் மாற்றங்கள் ஏற்படும்.
மரணத்துக்கு முன் மூளையில் என்ன நடக்கிறது என்ற மனித குலத்தின் நீண்டகால புதிருக்கு லூயிஸ்வில்லி யுனிவர்சிடியின் லேட்டஸ்ட் ஆய்வில் விடைக் கிடைதுள்ளது . மரணத்துக்கு முன், நம் மூளை அதிவேகமாக வாழ்க்கையின் முக்கிய நினைவுகளை மீட்டெடுத்து, மனக்கண் முன் நிறுத்துவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது மரணத்துக்கு அப்பால் என்ன என்பதை பற்றி புதிய தேடலுக்கு வழிவகுத்துள்ளது.
Readmore: பரபரப்பு…! கரூர் 40 பேர் மரணித்த சம்பவம்… தவெக தொடுத்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணை…!