மண்டபத்தில் இருந்து தப்பிய தர்ஷன்.. கத்தியால் குத்தி கொலை செய்த அறிவுக்கரசி..!! எதிர்நீச்சல் 2வில் அடுத்தது என்ன..?

ethir neechal 1

எதிர்நீச்சல் சீரியல் நேற்றைய எபிசோடில், அனைவரையும் தூங்க விட்டுவிட்டு குணசேகரன் மட்டும் விழித்திருந்து காவலில் இருந்தார். அந்த நேரம், வீரா ரௌடியிடம் இருந்த போன் வருகிறது. அதில், பேசிய குணசேகரன், மூன்று பேரின் கதையை முடித்துவிடுங்கள். சக்தி பொண்டாட்டியை சும்மா விடாதே, அவள் வாயிலேயே வெட்டு என்கிறார். உடனே ரௌடி வீரா, அனைவரின் கதையை முடித்துவிட்டு காலையில் ஃபோன் செய்கிறேன். நீங்க நிம்மதியாக இருங்கள் என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறான்.


மறுபுறம் அங்கிருந்த வீடியோ மேனை அழைத்து, “இது உன் பணம்.. வீடியோ ஆதாரம் எனக்கு வேண்டும்” என்று சொல்லி, வீடியோவுடன் இருந்த பேன் டிரைவை பெற்றுக்கொண்டார். பணத்தை வாங்கும் முன்பே, அவனை கத்தியால் குத்தி கொன்று, கழுத்தில் கால்வைத்து “ஒரு கோடி கேட்கிறியா!” என்று வில்லத்தனத்தை காட்டினார். வீடியோ மேன் அங்கேயே உயிரிழந்தான்.

ஜீவானந்தம், ஜனனி மற்றும் பார்கவி ரெளடிகளிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்து கொண்டிருக்கும் வேளையில், ரௌடிகள் உள்ளே வந்து தாக்கினார்கள். அப்போது ஜனனி ஒரே ஆவேசமாக அடித்து, எல்லா ரௌடிகளையும் ஓடவிட்டார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மூவரும் காரை பறித்து அங்கிருந்து தப்பினர்.

ஜனனியிடம் இருந்து போன் வராததால், சக்தி ஒரு காரை ஏற்பாடு செய்து தர்ஷனை அழைத்து செல்ல திட்டமிட்டார். ரேணுகா, நந்தினியிடம் “தர்ஷனை அழைத்து கீழே கொண்டு வா” என்று சொன்னார். ஆனால், குணசேகரன் விழித்திருந்ததால் என்ன செய்வதென்று புரியாமல் நந்தினி குழம்பி போய் நிக்கிறார்.

மாறுவேடத்தில் இருக்கும் நந்தினி முல்லையிடம் தர்ஷனை மேக்கப் போட அழைத்துவரும்படி சொல்கிறாள். இதையடுத்து, படுத்து இருக்கும் தர்ஷனை முல்லை யாருக்கும் தெரியாமல் அழைத்து வர, முல்லைக்கு டாடா காட்டிவிட்டு தர்ஷனை கடத்திக்கொண்டு சென்றுவிடுகின்றனர்.

Read more: காலையில் எழுந்தவுடன் இந்த பானத்தை மட்டும் குடித்து பாருங்க..!! கொட்டிக் கிடக்கும் நன்மைகள்..!!

English Summary

Darshan escaped from the hall.. Aruvukkarasi stabbed him to death..!! What’s next in Atarineechal 2..?

Next Post

ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் கவனத்திற்கு... நாளை தான் கடைசி...! உடனே இதை செய்து முடிக்க வேண்டும்...!

Mon Sep 29 , 2025
தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு நாளை கடைசி நாளாகும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு நாளை நாளாகும். இது குறித்து நிதிச் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் அனைத்துத் […]
money Pension 2025

You May Like