அபாய கட்டத்தில் ரேவதி.. கலங்கி நிற்கும் கார்த்தி.. காளியம்மாள் போடும் புது ப்ளான்..!! பரபரக்கும் கார்த்திகை தீபம் சீரியல்..

karthigai deepam 1

ரேவதிக்கு ரத்தம் கொடுக்க இருந்த மாரியை, சதி செய்த சிவனாண்டி கடத்தி அடைத்து வைத்தான். இந்த விஷயத்தை அறிந்த கார்த்தி, ரவுடிகளுடன் மோதி மாரியை மீட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அதன்பின் மாரி ரேவதிக்கு ரத்தம் கொடுத்தார். உடனே ஆபரேஷன் நடந்தது.


சில மணி நேரங்களின் அச்சமும் குழப்பமும் கழிந்த பிறகு, மருத்துவர் வெளியே வந்து “ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஆனாலும், ரேவதி இன்னும் அபாய நிலையில் தான் இருக்கிறார். நான்கு மணி நேரத்துக்குள் கண் விழிக்கவில்லை என்றால், பிழைப்பது கடினம்” என்று கார்த்தியிடம் தனியாகச் சொன்னார்.

இந்தச் செய்தியை கேட்ட கார்த்தியின் மனசு உடைந்து போனது. வெளியில் வந்த அவர், குடும்பத்தினரிடம் அந்த உண்மையை பகிர்ந்தார். அனைவரும் கலங்கிய நிலையில் கண்ணீருடன் நின்றார்கள். அந்த நேரத்தில், மாரி உறுதியுடன் முன்னே வந்து, “நீங்க கவலைப்படாதீங்க. ரேவதி நிச்சயமாக குணமடைவார். அதற்காக நான் சிறப்பு பூஜை செய்கிறேன். அந்த பூஜை அவளை காப்பாற்றும்” என்றார். உடனே அவர் பூஜைக்கான ஏற்பாடுகளை தொடங்கினார்.

ஆனால், மறுபக்கம் சதி தீட்டிக் கொண்டிருந்த சந்திரகலா, சிவனாண்டிக்கு போன் செய்து, “ரேவதியின் ஆபரேஷன் முடிந்துவிட்டது. ஆனால் அவள் இன்னும் அபாயத்தில் தான் இருக்கிறாள். மாரி பூஜை செய்யப் போகிறாள். அவள் பூஜை செய்துவிட்டால் நிச்சயம் ரேவதி பிழைத்துவிடுவாள். ரேவதி உயிரோடு இருந்தால், கார்த்திக் சாமுண்டீஸ்வரி வீட்டை விட்டு போவதே இல்லை. ரேவதி உயிர் பிழைக்கக் கூடாது. பூஜையும் நடக்கக் கூடாது. ஒரே கல்லில் இரண்டு மாங்கா அடிக்க நேரம் வந்துவிட்டது” என்று கூறினாள்.

இதைக் கேட்ட சிவனாண்டி, உடனே காளியம்மாளிடம் தகவலை சொல்லி, பூஜையைத் தடுக்க புதிய திட்டத்தை தீட்டத் தொடங்கினார். அடுத்தக் கணம் என்ன நடக்கும்? மாரியின் பூஜை வெற்றிகரமாக நடக்குமா? இல்லையா காளியம்மாளின் சதி வெற்றி பெறுமா? என்பதே கதை பரபரப்பாக நிற்கிறது.

Read more: இந்த தொழிலில் நஷ்டமே வராது..!! பண மழை கொட்டும்..!! இனி நீங்களும் பெட்ரோல் பங்க் அமைக்கலாம்..!!

Next Post

இன்று உலக இதய தினம்!. உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இவற்றை சாப்பிடுங்கள்!.

Mon Sep 29 , 2025
ஆண்டுதோறும் இன்று (செப்டம்பர் 29) உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளைக் கொண்டாடுவதன் நோக்கம் இதய நோயின் முக்கியத்துவம், அதன் தடுப்பு மற்றும் இதய பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். ஆரோக்கியமான இதயத்தைப் பராமரிப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய சில உணவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம். பச்சை இலை காய்கறிகள்: கீரை போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் […]
World Heart Day

You May Like