தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் தான், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளின் முழு கல்விச் செலவையும் எஸ்.ஆர்.எம். (SRM) கல்விக் குழுமம் ஏற்றுக் கொள்வதாக நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரூரில் நடைபெற்ற அரசியல் நிகழ்வின்போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் நலம் பெறப் பிராத்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முழு கல்விச் செலவையும் ஏற்கும் எஸ்.ஆர்.எம்.
மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களின் முழு கல்விச் செலவையும் SRM கல்விக்குழுமம் ஏற்கும் என்று பாரிவேந்தர் அறிவித்துள்ளார். அந்த மாணவர்கள் தற்போது எந்தக் கல்வி நிறுவனங்களில் படித்து வருகிறார்களோ, அவர்களது கல்விக்கட்டணம் நேரடியாக அந்த நிறுவனங்களுக்கே செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Read More : உங்கள் பழைய தங்க நகைகளை புதிது போல பளபளபாக்க வேண்டுமா..? செலவே இல்லாமல் வீட்டிலேயே ஈசியா செய்யலாம்..!!



