கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்ட யூ டியூபர் ஃபெலிக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இதனிடையே கரூர் நெரிசல் பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட.. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பரப்பிய 25 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 25 பேரையும் கைது செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் எனவும் பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது..
கரூர் விவகாரம் தொடர்பாக அவதூறு வீடியோக்கள் பதிவிட்ட 3 பேரை சென்னை நேற்று காவல்துறை கைது செய்தனர்… சென்னையை சேர்ந்த சகாயம், சிவனேசன், சரத்குமார் ஆகியோரை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது. இவர்களில் ஒருவர் பாஜக நிர்வாகி எனவும், இருவர் தவெக நிர்வாகிகள் என்று கூறப்படுகிறது.. இந்த 3 பேரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்ட யூ டியூபர் ஃபெலிக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.. மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஃபெலிக்ஸை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.. கரூர் சம்பவம் நடந்ததில் இருந்தே அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் பல்வேறு வீடியோக்களை ஃபெலிக்ஸ் பதிவிட்டு வந்தார்.. இந்த சூழலில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்..