திமுக எம்.பி கனிமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் கரூரில் இப்படிப்பட்ட துயர சம்பவம் நடந்திருக்கக் கூடாது.. மக்கள் மடிந்து கிடக்கும் போது தனது உயிர் தான் முக்கியம் என ஓடுவது இதுவரை பார்த்ததில்லை.. பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்காமல் தனது பாதுகாப்பு மட்டும் முக்கியம் என்று ஓடுவது என்பது நான் இதுவரை அறிந்திராத ஒன்று.. சரி தலைவர் வரவில்லை என்றால், அடுத்தக்கட்ட தலைவர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறாதது ஆச்சயர்மாக இருக்கிறது..
கரூர் துயர சம்பவம் இளைஞர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.. கரூர் துயர சம்பவம் இளைஞர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.. கரூர் துயரத்திற்கு யார் காரணம் என்பது விசாரணையில் தெரியவரும்.. பாதிக்கப்பட்ட மக்கள் திமுகவும் அரசும் உடன் நின்றது.. யாரையும் பழியோ குற்றமோ சொல்ல வேண்டிய நேரமல்ல.. மக்களை பற்றியும் மக்களுக்கு ஆறுதலாக இருப்பது பற்றியும் யோசிக்க வேண்டுமே தவிர இன்னும் பிரச்சனையை தூண்டுவது போல, வன்முறையை தூண்டுவது போல் பேசுவது நிச்சயமாக உச்சக்கட்ட பொறுப்பின்மை..
ஒரு நிலைமையை அமைதியாக்குவது தான் ஒரு அரசியல் கட்சி தலைவரின் கடமை.. வன்முறையை தூண்டும் வகையில், இன்னும் உயிரிழப்பும், இன்னும் சேதத்தையும் உருவாக்க கூடிய பேச்சுகளை உருவாக்குவது என்பது தவிர்க்கப்பட வேண்டும்.. அதனால் தான் முதல்வர் கூட அரசியல் பேச வேண்டிய இடம் இதுவல்ல.. ஆனால் தவெகவினர் செய்வது பொறுப்பின்மையின் உச்சக்கட்டம்.. மக்களை பற்றியும் கவலை இல்லை.. எப்படியும் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பது மிகவும் தவறான செயல்.. தவெக தலைவர், நிர்வாகிகள் ஆறுதல் கூற வராதது மனிதாபாமானம் இல்லை என்பதை காட்டுகிறது.. சமூக வலைதளங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்..” என்று தெரிவித்தார்..