கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூர் சம்பவத்தில் முறையாக விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி கரூர் காவல்துறையினர், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.. மேலும் இதுகுறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே கரூரில் கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறிய மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா ஹேமமாலினி தலைமையில் உண்மை கண்டறியும் குழு அமைத்தார். ஹேமமாலினி, ஆனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, ரேகா ஷர்மா உள்ளிட்ட 8 எம் பிக்கள் இந்த குழுவில் உள்ளனர். அதன்படி பாஜக குழு இன்று கரூர் சென்று ஆய்வு செய்யவுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர். ஹேமமாலினி தலைமையிலான பாஜக குழுவினர் கோவைக்கு விமானம் மூலம் இன்று வந்தனர். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு கரூர் சென்று ஆய்வு மேற்கொண்டனர்… அப்போது கூட்ட நெரிசல் குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும், முன்னாள் தலைவர் அண்ணாமலையும் விளக்கினர்.
இந்த நிலையில் கரூரில் ஹேமமாலினி தலைமையிலான தே.ஜ கூட்டணி எம்.பிக்கள் குழு பேட்டியளித்தனர்.. அனுராக் தாக்கூர் இதுகுறித்து பேசிய போது “ பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும்.. 300 பேர் நிற்க முடியாத இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.. ஏற்பாட்டாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்.. அரசு அதிகாரிகள், காவல்துறையினரும் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய ஹேமமாலினி “ அரசியல் வரலாற்றில் இதுபோன்ற விபத்து இதுவரை நடந்ததில்லை.. தவெகவினர் குறுகிய இடத்தை கேட்டிருந்தாலும் அரசு பெரிய இடத்தை தந்திருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்..
Read More : Breaking : தவெக நிர்வாகிகளுக்கு நீதிமன்ற காவல்.. அக்.14 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு..



