இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார், சைந்தவிக்கு நீதிமன்றம் பரஸ்பரம் விவாகரத்து வழங்கி உள்ளது..
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் காதலித்து கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.. இவருக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.. கடந்த 12 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் சமீபத்தில் அறிவித்தனர்..
பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.. இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.. கடந்த 25-ம் தேதி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்..வழக்கு விசாரணையின் போது, குழந்தையை சைந்தவி கவனித்துக் கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறியிருந்தார்..
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.. ஜி.வி பிரகாஷ் குமார், சைந்தவிக்கு நீதிமன்றம் பரஸ்பரம் விவாகரத்து வழங்கி உள்ளது.. சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிபதி செல்வ சுந்தரி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Read More : “தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றும் விஜய்.. ஆதவ் அர்ஜுனாவை வைத்து வன்முறை..” நடிகை ஓவியா பரபரப்பு பதிவு..



