நம் வீட்டு பல்லி சகுனம் சொன்னால் என்ன பலன்..? ஜோதிடம் என்ன சொல்கிறது..?

Lizards 11zon

நம் வீடுகளில் சாதாரணமாக காணப்படும் பல்லிகள், ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவிதமான சகுனம் சொல்வதாக கருதப்படுகிறது. நாம் வீட்டில் ஒரு முக்கியமான காரியத்தை பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென பல்லி சத்தம் எழுப்பினால், “பல்லியே சொல்லிருச்சு, நிச்சயம் காரியம் நல்லபடியாக நடக்கும்” என்று பெரியவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். பல்லி எந்த நாளில், எந்த திசையில் சத்தம் எழுப்புகிறது என்பதை கொண்டே அதன் பலன்களை பஞ்சாங்கம் தெளிவாக விளக்குகிறது.


இடம் வாரியாக கிடைக்கும் பலன்கள் :

வீட்டின் கீழே (பூமிப் பகுதி) : இந்த இடத்தில் பல்லி சத்தம் போட்டால் ஞாயிறு அன்று காரிய நாசம், திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் ஐஸ்வர்யம், செவ்வாய் கிழமையில் மிக லாபம், வியாழன் கிழமையில் நஷ்டம், வெள்ளி கிழமையில் கவனம் தேவை, சனி கிழமையில் காரிய சித்தி உண்டாகும்.

வீட்டின் மேலே (மேற்கூரை) : வீட்டின் மேற்கூரையில் பல்லியின் சத்தம் ஒலித்தால், ஞாயிறு கிழமையில் ஜெயம், திங்கள் கிழமையில் கேடு, செவ்வாய் கிழமையில் பிரயாணம், புதன் கிழமையில் நற்செய்தி, வியாழன் கிழமையில் கலகம், வெள்ளி கிழமையில் வஸ்து லாபம் உண்டாகும். சனி கிழமையில் காரியம் நடைபெறாது.

நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, பல்லி சத்தம் எழுப்பினால், அது எந்த நாள், எந்தத் திசையில் இருந்து சத்தமிட்டது என்பதைப் பார்த்துக் கிடைக்கும் பலனைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் காரியம் ஜெயமாகட்டும்.

Read More : ஆயுத பூஜை முதலில் உருவானது எப்படி..? வழிபட வேண்டிய வழிமுறை..!! உகந்த நேரம் எது..?

CHELLA

Next Post

நோட்..! திட்டமிட்டபடி தேர்வு... முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியானது...!

Wed Oct 1 , 2025
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் வாரியம் ஜூலை 10-ம் தேதி அன்று வெளியிட்டு அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரை பெறப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு […]
trb teachers recruitment board e1764485547423

You May Like