மருத்துவ மனையில் மாயா, ரேவதியை கொல்ல முயலும் போது சாமுண்டீஸ்வரி உள்ளே வந்துவிட, பதறிப் போன மாயா தப்பித்து ஓடிவிடுகிறாள். இந்த விஷயத்தை சாமுண்டீஸ்வரி கார்த்திக்கிடம் சொல்ல, “இப்போ நமக்கு முக்கியம் ரேவதியின் உயிர்தான்… மாயாவைப் பற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்கிறார்.. பின்னர், கார்த்திக், மாரியை மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார். ரேவதிக்கான அறுவை சிகிச்சை தயாராகிறது.
அனைவரும் மாயா வெளியில் ஓடிச்சென்றுவிட்டாள் என நினைத்திருந்தாலும், அவள் மருத்துவமனையிலேயே ஒளிந்து கிடக்கிறாள். ரேவதிக்கு ஆபரேஷன் நடப்பது தெரியவந்தவுடன், அதை தடுத்துவிட வேண்டும் என நினைத்து, கரண்ட் பாக்ஸை உடைத்து சேதப்படுத்துகிறாள். அதனால் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போதே பவர் கட் ஏற்படுகிறது.
ஜெனரேட்டரும் வேலை செய்யாததால், மருத்துவர் சிகிச்சை தடைப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார். உடனே கார்த்திக் வெளியே இருந்து ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறுகிறது. குண்டை வெளியே எடுத்து விட்டதால் இனி ரேவதிக்கு பிரச்சனை இல்லை என்று மருத்துவர் கூற, அனைவரும் நிம்மதி அடைகிறார்கள்.
அப்போது சாமுண்டீஸ்வரி, மாரிக்கு நன்றி கூற, அவர் “நன்றி சொல்ல வேண்டியது எனக்கு இல்லை… கடவுளுக்கே சொல்லுங்கள்” என்று கூறி கிளம்பிச் செல்கிறார். அதன்பின், “மாப்பிள்ளை ரேவதியுடன் இருக்கட்டும்… நாம் கோவிலுக்கு சென்று பூஜை செய்து வரலாம்” என்கிறார் சாமுண்டீஸ்வரி.
ரேவதியின் கையை பிடித்துக் கொண்டு கார்த்திக் கண் கலங்கியபடி, “உன்னை நான் மிகவும் விரும்புகிறேன் ரேவதி… உன்னுடைய ஒவ்வொரு குறும்பையும் ரசித்து இருக்கிறேன். ஆனால் தீபாவை போல உன்னையும் இழந்துவிடுவேனோ என்ற பயத்தால் வெளியில் சொல்லவில்லை. ஐ லவ் யூ ரேவதி” என்று வெளிப்படையாக சொல்கிறார். இதை கேட்டு மயக்கத்தில் இருந்த ரேவதி கண் கலங்குகிறாள்.
Read more: இந்திய-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது…!