சென்னை ஆவடியில் அமைந்துள்ள ஆயுதம் ஏந்திய ராணுவ வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் (AVNL) தற்போது ஜூனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணியிட விவரம்:
கனரக வாகன தொழிற்சாலை ஜூனியர் மேனேஜர் – 20
வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். மத்திய அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வு உள்ளது.
கல்வித் தகுதி விவரம்:
* ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பொறியியல்/ தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* அல்லது பொறியியல் அல்லாத ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் 2 ஆண்டு எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: இப்பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுவதால், முதலில் விண்ணப்பதாரர்கள் மதிப்பீடு செய்யப்படுவர். கல்வித்தகுதி மற்றும் தொடர்புடைய அனுபவம் படி, சிலர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
கல்வித் தகுதி: 85% மதிப்பெண்கள்
நேர்காணல் மதிப்பீடு: 15% மதிப்பெண்கள்
இதன் அடிப்படையில் இறுதி தேர்வு முடிவு செய்யப்படும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அழைப்பு கடிதம் தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படுவார்கள். நேர்காணல் முடிந்த பின் தேர்வு செய்யப்பட்ட பட்டியல் நிறுவன இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்கள் முதலில் 1 வருட ஒப்பந்தம் அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://ddpdoo.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து, சாதரண தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Chief General Manager, Heavy Vehicles Factory, Avadi, Chennai – 600 054.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 11.10.2025 ஆகும்.