கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் “ கடந்த 27-ம் தேதி கரூரில் நடந்த சம்பவம் கொடுமையானது.. கரூர் மாவட்டத்தில் இதுவரை நடந்திராத ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.. யாராலும் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத துயர சம்பவம்.. கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்க்ப்பட்டுள்ளது..
இந்த நிகழ்வில் கட்சிகள், இயக்கங்கள் பார்க்காமல் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களுக்கு உதவிய தருணமாக அமைந்துள்ளது.. இதுபோன்ற துயர சம்பவம் இனி தமிழ்நாட்டிலும் நடக்கக் கூடாது..” என்று தெரிவித்தார்..
கரூரில் மட்டும் இந்த கூட்ட நெரிசல் ஏன் நடந்தது என்பது குறித்து தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர், இந்த விஷயத்தில் நான் அரசியலாக பார்க்காமல் மனிதாபாமான விஷயமாக பார்க்க வேண்டும்.. ஒன்றரை வயது குழந்தை இறந்துள்ளது.. இதை அரசியல் நிகழ்வாக பார்க்காமல், இனி வரும் நாட்களில் இதுபோன்ற துயர சம்பவம் நடக்கக் கூடாது என்று நினைத்தால் நன்றாக இருக்கும்.. தமிழ்நாட்டில் எங்குமே இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தவெக கேட்ட இடங்களில் வேலுச்சாமி புரம் தான் அதிக கூட்டம் சேரும் இடம்.. அவர்கள் கேட்ட லைட் ஹவுஸ் பகுதியில் அதிகபட்சமாக 7000 பேர் நிற்க முடியும்.. எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.. கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகளை அந்தந்த கட்சியினர் ஏற்பாடு செய்ய வேண்டும்..
மாலை 4 மணிக்கு சுமார் 5000 பேர் இருந்தனர்.. குறித்த நேரத்தில் அந்த கூட்டம் நடந்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது.. 41 பேர் இறப்பு சம்மந்தப்பட்ட நிகழ்வு.. இது ஒரு துயர சம்பவம்.. எந்த இடத்தில் தவறு உள்ளது என்பது மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை பத்திரிகைகளுக்கு உள்ளது.. ஜெனரேட்டர் ரூமில் வெளி ஆட்கள் மின்சாரத்தை துண்டிக்க முடியுமா?
கூட்ட நெரிசல் காரணமாக தவெக தொண்டர்கள் ஜெனரேட்டர் அறைக்கு சென்றனர்.. அதனால் ஜெனரேட்டர் அணைக்கப்பட்டது.. ஜெனரேட்டர் அணைக்கப்பட்ட நேரத்தில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டு தான் இருந்தன.. விஜய்யின் கவனத்தை ஈர்க்கவே சிலர் செருப்பை வீசினர்.. அதன்பின்னர் அவர்களுக்கு தன்ணீர் பாட்டில் கொடுக்கப்பட்டது.. தண்ணீர் தேவை என்ற உதவிக்காகவே அவர்கள் செருப்புகளை வீசினர்..
பொதுவாக ஒரு அரசியல் கட்சி தலைவர் கூட்டம் போட்டால், வாகனத்தில் முன் சீட்டில் உட்காருவார்கள்.. ஆனால் இங்கு வரும் போது 500 மீட்டருக்கு முன்பு விஜய் வாகனத்தின் ஷட்டர் மூடப்பட்டது.. லைட் ஆஃப் செய்யப்பட்டது.. அவர் பேருந்தின் உள்ளே சென்றுவிட்டார்.. வாகனத்தின் முன் பகுதியில் நின்று கை அசைத்திருந்தாலே அவரை பார்க்க கூட்டம் வந்திருக்காது… அதுவரை முன் சீட்டில் இருந்த விஜய் ஏன் அப்போது வாகனத்தின் உள்ளே செல்ல வேண்டும்?
500 மீட்டருக்கு முன்பே நிறுத்தி பேசுங்கள் என்று காவல்துறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை.. காவல்துறை சொன்ன எந்த விஷயங்களையும் அவர் கேட்கவில்லை.. விஜய்யின் அனைத்து கூட்டங்களிலும் பலர் மயக்கமடைந்தனர்.. அடுத்தடுத்த கூட்டங்களில் அவர்கள் அதை சரி செய்திருக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்.