மாவட்ட சட்ட சேவைகள் பிரிவில் வேலை.. ரூ.70,000 சம்பளம்.. செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

job 1

கடலூர் மாவட்ட சட்ட சேவைகள் பிரிவின் கீழ் செயல்படும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணியிட விவரம்:

தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் – 1
துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் – 2
உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் – 1
அலுவலக உதவியாளர்/ எழுத்தர் – 1

தகுதிகள்:

தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்:

  • குற்றவியல் சட்டத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம்
  • குறைந்தது 30 குற்ற வழக்குகளை கையாண்ட அனுபவம்
  • கணினி திறன் அவசியம்

துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்

  • குற்றவியல் சட்டத்தில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அனுபவம்
  • குறைந்தது 20 குற்ற வழக்குகளில் வாதாடியிருக்க வேண்டும்

உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்

  • குற்ற வழக்குகளை கையாண்ட 3 ஆண்டுகள் அனுபவம்
  • ஆய்வு மற்றும் வரைவு திறன் அவசியம்

அலுவலக உதவியாளர்

  • ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
  • 40 w.p.m வேகத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்
  • அடிப்படை கணினி திறன் அவசியம்

சம்பள விவரம்:

* தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.70,000 சம்பளமாக வழங்கப்படும்.

* துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.

* உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

* அலுவலக உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஒப்பந்த முறையில் நிரப்பப்படும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது? கடலூரின் மாவட்ட நீதிமன்றத்தின் https://cuddalore.dcourts.gov.in/ என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 2 புகைப்படம், கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் இதர ஆவணங்களின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தபால் வழியாகவோ அல்லது நேரடியாகவோ சென்று விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி: அக்டோபர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Read more: அடேங்கப்பா!. ரூ.41.7 லட்சம் கோடி சொத்து!. உலகின் முதல் நபர்!. வரலாற்று மைல்கல்லை எட்டிய எலான் மஸ்க்!.

English Summary

A notification has been issued to fill vacant posts in the Cuddalore District Legal Services Division.

Next Post

குழப்பமே வேண்டாம்..!! முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடலாமா..? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்..? வெளியான புதிய ஆய்வு முடிவு..!!

Thu Oct 2 , 2025
பல ஆண்டுகளாக நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி வரும் கேள்வி முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிட வேண்டுமா? வேண்டாமா? என்பது தான். சிலர் இதை ஊட்டச்சத்துக்களின் சுரங்கம் என்று பாராட்ட, வேறு சிலர் இதில் உள்ள கொலஸ்ட்ரால் குறித்து அஞ்சுகிறார்கள். இதனால் பலர் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டுவிட்டு மஞ்சள் கருவைத் தவிர்த்து விடுகின்றனர். சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சிகளின் அடிப்படையில், முட்டையின் மஞ்சள் கருவின் உண்மைத் தாக்கம் என்னவென்று இப்போது பார்க்கலாம். மஞ்சள் […]
eating eggs weight gain 1

You May Like