எத்தியோப்பியா தேவாலயத்தில் உள்ள கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில் 36 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவி ன் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து 70 கி.மீ., தொலைவில் அம்ஹாரா பிராந்தியத்தில் அரெர்டி நகரம் உள்ளது. இந்நகரில் உள்ள மென்ஜார் ஷென்கோரா அரெர்டி மரியம் சர்ச்சில், ஆண்டுதோறும் மதவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் நடந்த விழாவில் பங்கேற்க ஏராளமானோர் கூடியிருந்தனர். இந்நிலையில், அந்த சர்ச்சில் மறு சீரமைப்புக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த மர சாரம் திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது அங்கிருந்த பலர், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில், 36 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தை நேரில் பார்த்த மகியாஸ் என்பவர் கூறியதாவது, நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய கூடியிருந்தோம். அப்போது திடீரென தேவாலயத்தில் கட்டுமான பணி நடந்து ஒரு பகுதி இடிந்து விழுந்தது என்றார்.
Readmore: காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டத்தில் வெளுக்க போகும் கனமழை…! மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம்…!