74 வயதிலும் ரஜினி தொடர்ந்து சுறுசுறுப்பாக படங்களில் நடித்து வருவது திரையுலகினரையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதேசமயம், அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சர்ச்சைகளும், அரசியல் தொடர்பான கருத்துக்களும் எப்போதுமே பேச்சுக்குரியவையாக இருந்து வருகின்றன. குறிப்பாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட அவருடைய மோதல்கள் அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
பாட்ஷா வெற்றி விழாவில் “தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பெருகிவிட்டது” என ரஜினி பேசியதும், “ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால்கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது” என கடுமையாக விமர்சித்ததும், அந்தக் காலத்தில் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருப்பினும், பின்னர் ஜெயலலிதா அவரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், நடிகர் ராதா ரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜெயலலிதா மற்றும் ரஜினி சம்பந்தமான ஒரு சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:
“பாபா” படத்தின் ஷூட்டிங் கோலா வளாகத்தில் நடந்து கொண்டிருந்த போது, சில அதிமுகவினர் அங்கு பிரச்சனை செய்ததாக தகவல் வந்தது. அப்போது நான் எம்.எல்.ஏ. ஆக இருந்தேன்.
உடனே முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா என்னை தொடர்புகொண்டு, “ரஜினிகாந்த் படப்பிடிப்பில் பிரச்னை வரக்கூடாது. உடனே அங்கு சென்று பார்த்து வாருங்கள். எந்த சிக்கலும் ஏற்பட்டால் அரசாங்கம் அவருடன் இருக்கும்” என்று தெரிவித்தார். பின்னர் நான் அங்கு சென்று ரஜினியிடம் இந்த செய்தியை தெரிவித்தேன். அதை கேட்ட ரஜினி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்,” என ராதா ரவி கூறியுள்ளார்.
Read more: பாகிஸ்தானின் F-16 & J-17 போர் விமானங்கள் ஆபரேஷன் சிந்தூரில் அழிக்கப்பட்டன; IAF தலைவர் பேட்டி.!