கரூர் விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவையும் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது..
ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினர் கரூருக்கு செல்லவில்லை.. விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு அன்றிரவே சென்னை வந்தடைந்தார்.. 3 நாட்களுக்கு பின் இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல், திமுக அரசை விமர்சித்து பேசியிருந்தார்.. மேலும் தனது வீடியோவில் அவர் வருத்தம் தெரிவிக்காததும், மன்னிப்பு கேட்காததும் அதிருப்தியை ஏற்படுத்தியது.. அதுமட்டுமின்றி “ சி.எம்.சார் என்ன பழிவாங்கணும்னா என்ன எது வேண்டுமானாலும் செய்யுங்க.. தொண்டர்கள் மீது கை வைக்காதீங்க..” என்று கூறியிருந்தார்.. விஜய்யின் இந்த பேசி சினிமா டயலாக் மாதிரி இருப்பதாக பலரும் விமர்சித்திருந்தனர்..
இந்த நிலையில், கரூர் சம்பவம் போன்ற இனி எந்த சம்பவங்களும் நிகழக்கூடாது என்றும், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது விஜய்யின் பிரச்சார வாகனத்தை ஆபத்தான முறையில் பின் தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சிகள் நீதிபதிக்கு காட்டப்பட்டது.. இதை பார்த்த நீதிபதி சில காட்டமான கருத்துகளை தெரிவித்தார்.. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வீடியோக்களை பார்க்கும் போது வேதனையளக்கிறது..
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களா? விஜய்யின் பிரச்சார வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா? இதுவரை 2 பேரை மட்டும் தான் கைது செய்திருக்கிறீர்களா? விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? நீதிமன்றம் எல்லாவற்றையும் கண் மூடி வேடிக்கை பார்க்காது.. கட்டுப்படுத்தப்படாத கலவரம் போல் இது நடந்துள்ளது.. சம்பவம் தொடர்பக வழக்குப்பதிவு செய்ய என்ன தடை? புகார் இல்லாவிட்டாலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.. சம்பவம் நடந்த உடன் தவெகவினர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்..” என்று தெரிவித்தனர்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் அரசு யாரையும் பாதுகாக்கவில்லை என்று அரசு தரப்பு தெரிவித்தது. மேலும் விஜய்யின் வாகனத்தில் உள்ள சிசிடிடி காட்சிகளை தர வேண்டும் என்றும் அரசு கோரிக்கை விடுத்தது.
மேலும் கரூரில் காவல்துறை விதித்த நிபந்தனைகளில் 2 நிபந்தனைகள் மட்டுமே பின்பற்றப்பட்டது.. மீதமுள்ள அனைத்து நிபந்தனைகளும் மீறப்பட்டன.. 8.45 மணிக்கு நாமக்கல்லில் பிரச்சாரம் என்று சொல்லிவிட்டு விஜய் 8.50 மணிக்கு தான் சென்னையில் இருந்தே புறப்பட்டார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி “ கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு.. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்.. அரசு அமைதியாக இருக்க முடியாது.. யார் மீது தவறு உள்ளதோ அவர் மீது நடவடிக்கை வேண்டும்.. தவெக என்ன மாதிரியான கட்சி..? மக்களை கைவிட்டு தலைவரும் பொறுப்பாளர்களும் பொறுப்பற்ற முறையில் வெளியேறி உள்ளனர்.. தங்கள் தொண்டர்களை விட்டு விட்டார்கள்.. தலைமைத்துவ பண்பே இல்லை.. சம்பவத்திற்கு பொறுப்பேற்காத தவெகவுக்கு கடும் கண்டனம்..” என்று நீதிபதி காட்டமாக பேசினார்..
தொடர்ந்து கரூர் விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவையும் அமைத்து நீதிபதி உத்தரவிட்டார்.. வடக்கு மண்டல ஐஜி அஸ்ராக் கார்க் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவிடம் கரூர் போலீசார் வழக்கு ஆவணங்களை வழங்கவும் உத்தரவிட்டார்..



