வீட்டு குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயம், எரிவாயு சிலிண்டர் சீக்கிரம் தீர்ந்து போவதுதான். பண்டிகை காலமானாலும், அன்றாட சமையலாக இருந்தாலும் எதிர்பாராத இந்த அதிக எரிவாயு நுகர்வு பலருக்கும் தலைவலியாக இருக்கிறது. சிலிண்டர் குறைவாக நிரப்பப்பட்டிருக்கலாம் அல்லது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு இருக்கலாம் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், ஆச்சரியப்படும் விதமாக, சிலிண்டர் முன்கூட்டியே தீர்ந்து போவதற்கு நாமே அறியாமல் செய்யும் சில தவறுகளும், சுற்றுச்சூழல் காரணிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
எரிவாயு சிக்கலுக்குப் பின்னணியில் இருக்கும் முக்கியக் காரணங்களை நாம் கவனிக்கத் தவறுகிறோம். முதலாவதாக, குளிர்காலங்களில் சிலிண்டருக்குள் இருக்கும் எரிவாயு உறைந்துவிடும் வாய்ப்புள்ளது. இதனால், அடுப்பின் சுடர் பலவீனமாக எரிவதுடன், சிலிண்டர் விரைவாகத் தீர்ந்துவிடுகிறது. இரண்டாவதாக, குழாய் அல்லது ரெகுலேட்டரில் ஏதேனும் கசிவு ஏற்பட்டால், எரிவாயு சிறிது சிறிதாக வெளியேறி, மொத்த சிலிண்டரின் ஆயுளையும் வெகுவாக குறைக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில், எரிவாயு வீணாகி, நமது மாதச் செலவில் பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.
எரிவாயுவைச் சேமிக்க எளிய சமையல் குறிப்புகள் :
* உணவுப் பொருட்களைச் சமைக்க எப்போதும் பிரஷர் குக்கரைப் பயன்படுத்துவது நேரத்தையும் எரிவாயுவையும் வெகுவாக சேமிக்கும்.
* சமைக்கும்போது பாத்திரங்களை மூடி வைப்பது (Lid) சமையலை வேகமாக்குவதுடன், அதிக எரிவாயு பயன்பாட்டையும் தவிர்க்கிறது.
* அதிக வெப்பத்திற்குப் பதிலாக, நடுத்தர வெப்பத்தை பயன்படுத்தும் பழக்கத்தை கடைப்பிடிக்கலாம். இது உணவை மெதுவாகவும் திறம்படவும் சமைக்க உதவுவதுடன் எரிவாயுவையும் சேமிக்கிறது.
* சமையலுக்கு முன் பாத்திரங்களை அறை வெப்பநிலையில் வைக்க வேண்டியது முக்கியம். குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட அல்லது ஈரமான பாத்திரங்களை நேரடியாக அடுப்பில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
* எரிவாயு வீணாவதைத் தடுக்க, சிலிண்டர் மற்றும் அதனுடன் இணைந்த உபகரணங்களின் பராமரிப்பு மிக முக்கியம்.
* குழாய்கள், ரெகுலேட்டர் மற்றும் சிலிண்டரை அவ்வப்போது பரிசோதனை செய்வது அவசியம். குழாய்களில் சோப்புத் தண்ணீரைக் கொண்டு சோதனை செய்து குமிழ்களைக் காண்பதன் மூலம் கசிவுகளை எளிதாகக் கண்டறியலாம்.
* குளிர் காலத்தில் எரிவாயு உறைவதைத் தடுக்க, சிலிண்டரை ஒரு சணல் பையால் (Jute Bag) மூடுவது அல்லது சிறிதளவு வெதுவெதுப்பான நீரில் (Lukewarm Water) சிறிது நேரம் ஊறவைப்பது போன்ற முறைகளைப் பயன்படுத்தலாம். மேலும், சிலிண்டரைத் தரையில் வைக்காமல், அதற்கென இருக்கும் தள்ளுவண்டியில் (Trolley) வைப்பது அதன் செயல்பாட்டுக்கு நல்லது.
* சரியான பர்னரைத் தேர்வு செய்வது, மற்றும் பழைய சிலிண்டர் குழாய்கள் (Hose Pipes) மற்றும் ரெகுலேட்டர்களை தவறாமல் மாற்றுவது போன்றவை எரிவாயுவைச் சேமிப்பதுடன், சிலிண்டரின் ஆயுளையும் நீட்டிக்கின்றன.
Read More : பெரும் சோகம்..!! தூக்கி வீசிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்..!! துடிதுடித்து பலியான 4 சிறுவர்கள்..!!



