கரூர் துயரம் குறித்து இபிஎஸ் பதவி வெறியில் பேசுகிறார்.. டிடிவி தினகரன் காட்டம்..! முதல்வர் நிதானமாக கையாள்கிறார் என பாராட்டு!

TTV Dhinakaran vs EPS

கரூர் துயரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பதவி வெறியில் பேசி வருவதாகவும் டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்தார்..

கரூர் துயரத்திற்கு தவெக தலைவர் விஜய் தார்மீக பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ கரூரில் நடந்தது விபத்து தான்.. விஜய் தார்மீக பொறுப்பு ஏற்றிருந்தால் நீதிமன்றம் கூட இவ்வளவு விமர்சித்திருக்காது.” என்று தெரிவித்தார்..


மேலும் கரூர் துயரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பதவி வெறியில் பேசி வருவதாகவும் டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசும் சீமான் கூட நிதானமாக பேசுகிறார்.. ஆனால் எடப்பாடி பழனிசாமி பதவி வெறியில் பேசுகிறார்.. தலைகீழாக நின்றாலும் இபிஎஸ் பதவிக்கு வர முடியாது.. அவர் பதவிக்கு வர அமமுகவும் விடாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.

கரூர் துயரத்திற்கு ஆளுங்கட்சியை எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பது மோசமான செயல் என்று கூறிய அவர் இதில் பாஜகவும் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார்.. மேலும் “ எடப்பாடி பழனிசாமிக்கு இணையாக பாஜகவும் கரூர் விவகாரத்தில் அரசியல் செய்வது வருத்தம் அளிக்கிறது.. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போது பாஜக உண்மை கண்டறியும் குழு ஏன் வரவில்லை..” என்றும் டிடிவி கேள்வி எழுப்பினார்..

தொடர்ந்து பேசிய அவர் கரூர் துயர சம்பவத்தை சதி என அண்ணாமலை கூறியது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.. வழக்கம் போல் எடப்பாடி பழனிசாமி பேசுவது அநாகரீகமாக உள்ளது.. கூட்டணி குறித்து பேசும் நேரமா இது எனவும் கடுமையாக விமர்சித்தார்..

அதே நேரம் கரூர் விவகாரத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிதானமாக கையாளுகிறார் என்று டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்தார். மேலும் “ கரூர் விவகாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின், காவல்துறை சரியான முறையில் கையாண்டுள்ளது.. எந்த தலைவனும் தனது தொண்டர் இறப்பதை விரும்ப மாட்டார் என முதல்வர் கூறியது சரிதான்.. அச்சத்தில் தவெகவினர் மற்றவர்கள் மீது பழி போடுகின்றனர்..” என்று தெரிவித்தார்.. புரட்சி வெடிக்கும் என்ற தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் பதிவு பொறுப்பற்றது எனவும் அவர் விமர்சித்தார்..

கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது..

ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய் இன்னும் கரூருக்கு செல்லவில்லை.. விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு அன்றிரவே சென்னை வந்தடைந்தார்.. 3 நாட்களுக்கு பின் இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல், திமுக அரசை விமர்சித்து பேசியிருந்தார்.. மேலும் தனது வீடியோவில் அவர் வருத்தம் தெரிவிக்காததும், மன்னிப்பு கேட்காததும் அதிருப்தியை ஏற்படுத்தியது.. அதுமட்டுமின்றி “ சி.எம்.சார் என்ன பழிவாங்கணும்னா என்ன எது வேண்டுமானாலும் செய்யுங்க.. தொண்டர்கள் மீது கை வைக்காதீங்க..” என்று கூறியிருந்தார்.. விஜய்யின் இந்த பேச்சு சினிமா டயலாக் மாதிரி இருப்பதாக பலரும் விமர்சித்திருந்தனர்..

இதனிடையே இதுதொடர்பான வழக்கில் தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.. மேஎலும் “ கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு.. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்.. அரசு அமைதியாக இருக்க முடியாது.. யார் மீது தவறு உள்ளதோ அவர் மீது நடவடிக்கை வேண்டும்.. தவெக என்ன மாதிரியான கட்சி..? மக்களை கைவிட்டு தலைவரும் பொறுப்பாளர்களும் பொறுப்பற்ற முறையில் வெளியேறி உள்ளனர்.. தங்கள் தொண்டர்களை விட்டு விட்டார்கள்.. தலைமைத்துவ பண்பே இல்லை.. சம்பவத்திற்கு பொறுப்பேற்காத தவெகவுக்கு கடும் கண்டனம்..” என்று நீதிபதி காட்டமாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Read More : நாளை 2 இடங்களில் நடைபெற இருந்த இபிஎஸ்ஸின் பிரச்சாரம் ரத்து.. இதுதான் காரணம்!

English Summary

TTV Dhinakaran also criticized Edappadi Palaniswami for speaking out of a sense of entitlement about the Karur tragedy.

RUPA

Next Post

30 பேர் காயம்; உக்ரைனின் பயணிகள் ரயில் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய ரஷ்யா!

Sat Oct 4 , 2025
உக்ரைனின் சுமி பகுதியில் பயணிகள் ரயில் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில், 30 பேர் காயமடைந்தனர்.. உக்ரைனின் சுமி பகுதியில் உள்ள ஒரு ரயில் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 30 பேர் காயமடைந்ததாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “சுமி பிராந்தியத்தின் ஷோஸ்ட்காவில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு காட்டுமிராண்டித்தனமான ரஷ்ய ட்ரோன் தாக்குதல். […]
ukraine train russia missile strike 1759573925 2

You May Like