fbpx

11 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த ‘மிதிலி’ புயலானது, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, நேற்று (17-11-2023) பிற்பகல் வங்கதேசம் கடற்கரை அருகில் கேப்புபாராவில் கரையை கடந்தது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

இளம்பெண் முன் அந்தரங்க உறுப்பை எடுத்து அசிங்கம் செய்த காவலர்..!! மின்சார ரயிலில் பரபரப்பு..!!

Sat Nov 18 , 2023
சென்னை கோம்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 14ஆம் தேதி கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த பெட்டியில் பயணம் செய்த ஆண் ஒருவர் திடீரென தனது அந்தரங்க உறுப்பை காண்பித்து ஆபாசமாக நடந்துகொண்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். […]

You May Like