கணவனை விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிப்போன பெண்..!! மிஞ்சியது எலும்புக் கூடும் மட்டும் தான்..!! 2 ஆண்டுகள் கழித்து வெளிவந்த உண்மை..!!

Sex 2025 5

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே ராங் கால் (தவறான அழைப்பு) மூலம் உருவான ஒரு கள்ளக்காதல் சம்பவம் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 2023இல், சோனம் (30) என்ற திருமணமான பெண், தவறுதலாக ஒரு தொலைபேசி எண்ணை அழைத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்றுப் பேசிய மசீதல் என்பவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. சோனமின் கணவர் மாநிலத்திற்கு வெளியே பணிபுரிந்த நிலையில், நாளடைவில் இவர்களின் பேச்சும் பழக்கமும் கள்ளக்காதலாக மாறியது.


கள்ளக்காதல் உச்சத்தை எட்டிய நிலையில், ஆகஸ்ட் 6, 2023 அன்று சோனம் மாயமானார். தனது மருமகளை கடத்தியிருக்கலாம் என அவரது மாமனார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 2 ஆண்டுகள் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜூன் மாதம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உயரதிகாரிகள் உத்தரவிட்ட பிறகு, சோனமின் தொலைபேசி அழைப்புகள் குறித்து போலீசார் ஆராய்ந்தனர்.

அதில், ஒரே ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து மட்டுமே சோனமிற்கு ஒரு முறை அழைப்பு வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த எண்ணை வைத்து போலீசார் குஜராத் வரை சென்று விசாரித்ததில், அந்த எண் முதலில் கள்ளக்காதலன் மசீதல் பெயரில் பதிவாகியிருந்தது தெரிய வந்தது. விசாரணையில், சோனம் தனது கணவனை விட்டு விலகிச் சென்று மசீதலுடன் ரகசியமாக குடும்பம் நடத்தியது உறுதியானது. அவர்கள் டெல்லி சென்று மீண்டும் ஹர்தோய் பகுதிக்குத் திரும்பியபோது, ஆகஸ்ட் 8, 2023 அன்று இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

சோனம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மசீதலுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், இதற்கு மசீதல் தயாராக இல்லாததால் ஏற்பட்ட சண்டையிலேயே கொலை நடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆத்திரத்தில் மசீதல் தனது சகோதரர் ஷம்ஷீதுல் மற்றும் தந்தை அயூப் ஆகியோருடன் சேர்ந்து சோனத்தை அடித்துக் கொன்று, அவரது உடலை ஒரு கிணற்றில் வீசியுள்ளார். விசாரணையில் இந்த அனைத்து உண்மைகளும் வெளிவந்த நிலையில், தலைமறைவாக இருந்த மசீதல் மற்றும் அவரது உறவினர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், கிணற்றில் இருந்து சோனமின் உடல் எலும்புக்கூடாக மட்டுமே மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : இத்தனை வகையான ஆணுறைகள் இருக்கா..? விந்தணு கொல்லி ஆணுறை பற்றி தெரியுமா..!! பலரும் இதைத்தான் வாங்குகிறார்களாம்..!!

CHELLA

Next Post

ரூ.2,40,000 வரை சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. B.E படித்தவர்களுக்கு செம சான்ஸ்..!!

Sun Oct 5 , 2025
A recruitment notification has been issued by the Solar Energy Corporation of India, a central government organization.
job 1 1

You May Like