பிக்பாஸ் வீட்டில் முதல் நாளே ஏழரையை இழுத்த தற்பெருமை திவாகர்.. எச்சரித்த VJ பார்வதி.. கலாய்த்து விட்ட எஃப்.ஜே..!!

diwakar

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் 100 நாட்கள் வரை வாழ வேண்டும். அங்கு நடைபெறும் போட்டிகள், உடல்சார் மற்றும் மனோதிட செயல்பாடுகள், பங்கேற்பாளர்களின் உண்மை முகங்களை வெளிப்படுத்தும். ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் மூலம் போட்டியாளர்கள் வெளியேறுவார்கள். இறுதி வரை இருப்பவருக்கே ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.


இந்த சீசன் நேற்று தொடங்கிய நிலையில், முதல் போட்டியாளராக வீட்டிற்குள் சென்றவர் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் தான். அவர் மருத்துவதுறையை சேர்த்தவர் என்ற காரணத்திற்காகவே அவரை பிக்பாஸ் குழு தேர்வு செய்துள்ளது என்று விஜய் சேதுபதி தெரிவித்தார். மக்களிடம் அறிமுகப்படுத்துவதற்காக விஜய் சேதுபதி இவரை மேடைக்கு அழைத்தபோது பார்வையாளர்களை பார்த்து கை அசைத்தார். ஆனால், பார்வையாளர்கள் யாரும் கைத்தட்டவில்லை. இதனால் ‘கை தட்டுங்க பாவம்’ என விஜய் சேதுபதி சொல்ல அதன்பின் பார்வையாளர்கள் கை தட்டினார்கள்.

அதேபோல் இரண்டாவது போட்டியாளராக களமிறங்கிய அரோராவை வீட்டிற்குள் சந்தித்து பேசி விட்டு, உங்க கண் அழகாக இருக்கிறது என்று கூறினார். இதைக் கேட்டதும் அங்கு இருந்த மூன்றாவது போட்டியாளரான எஃப்.ஜே அந்த பொண்ணுக்கு உன்னோட பேத்தி வயசு ஆகுது என்று கூறி கலாய்த்தார்.

அதன் பின்னர் மேலும் சில போட்டியாளர்கள் எல்லாரும் சென்ற பின்னர், தனது வழக்கமான சில நடிப்பு தொல்லைகளான சிவாஜி போல நடிப்பது போன்ற காட்சியை நடித்துக் காட்டினார். அப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது அவர் நடந்து வர, அருகில் நின்று கொண்டு இருந்த பார்வதியின் உடையை மிதிக்க, உடனே அவர் ” ஏய் பாவாடை பாவாடை ” என்று கூறினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Read more: தூத்துக்குடியில் பயங்கரம்..!! கொட்டித் தீர்த்த கனமழை..!! மின்னல் தாக்கியதில் 4 இளைஞர்களுக்கு நிகழ்ந்த சோகம்..!!

English Summary

Water Milan Diwakar, who pulled a seven-and-a-half on the first day in the Bigg Boss house.. VJ Parvathy warned.. FJ made fun of him..!!

Next Post

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்...!

Mon Oct 6 , 2025
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் […]
College students 2025

You May Like