தூம் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கிய தயாரிப்பாளர் சஞ்சய் காத்வி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. 2004ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான படம் ‘தூம்’. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து 2006ஆம் ஆண்டு ஹ்ரித்திக் ரோஷன் நடித்து வெளியான ‘தூம் 2’ திரைப்படமும் பெரும் வெற்றிபெற்றது.
இந்த இரண்டு படங்களை இயக்கியவர் சஞ்சய் காத்வி. இவை தவிர ‘தேரே லியே’, ‘மேரே யார் கி ஷாதி ஹே’ உள்ளிட்ட திரைப்படங்களையும் சஞ்சய் காத்வி இயக்கியுள்ளார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அபிஷேக் பச்சன் ஞாயிற்றுக்கிழமை திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சய் காத்விக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். கடந்த வாரம் தான் இயக்குனரிடம் பேசியதாகவும், அவருக்காக இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என கூறியுள்ளார் .