இந்திய ரயில்வே வாரியம், Non-Technical Popular Categories (NTPC) எனப்படும் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட ஒப்புதல் அளித்துள்ளது. 2025 செப்டம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த ஆவணம், அனைத்து மண்டல ரயில்வே மற்றும் உற்பத்திப் பிரிவுகளின் பொது மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இது இந்திய இளைஞர்களுக்கு ரயில்வே துறையில் பணிபுரிய சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.
பணியிட விவரம்: ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (CRB & CEO) அனுமதி வழங்கியுள்ள இந்த ஆட்சேர்ப்பின் கீழ், மொத்தம் 8,875 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில்:
பட்டதாரி நிலைப் பணியிடங்கள்: 5,817
(10+2) நிலைப் பணியிடங்கள்: 3,058
இந்தப் பணியிடங்களின் விவரங்கள் HRMS (Human Resource Management System) பிரிவின் ஆய்வுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளன.
பட்டதாரி பிரிவில் பல முக்கியமான பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
- Goods Train Manager (Pay Level 5) – 3,423 இடங்கள்
- Station Master (Pay Level 6) – 615 இடங்கள்
- Junior Accounts Assistant cum Typist (JAA) – 921 இடங்கள்
- Senior Clerk cum Typist (Pay Level 5) – 638 இடங்கள்
கல்வித் தகுதி:
* பட்டதாரி நிலைப் பணியிடங்களுக்கு: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும்.
* இளங்கலை (Undergraduate) நிலைப் பணியிடங்களுக்கு:
அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 12ஆம் வகுப்பு (10+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* தட்டச்சுப் பணிகளுக்கு (JAA / Sr. Clerk): Typing Proficiency (தட்டச்சுத் திறமை) அவசியம்.
வயது வரம்பு:
பட்டதாரி நிலை: 18 முதல் 36 வயது வரை
இளங்கலை நிலை: 18 முதல் 33 வயது வரை
வயது தளர்வு:
SC/ST பிரிவினருக்கு – 5 ஆண்டுகள்
OBC பிரிவினருக்கு – 3 ஆண்டுகள்
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் மண்டல இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://www.rrbchennai.gov.in/) விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பு ஒரு முன்-அறிவிப்பு மட்டுமே. விரிவான RRB NTPC Notification 2025 விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வேயில் பணிபுரிய விரும்பும் இளைஞர்கள் தங்கள் கல்வித்தகுதி ஆவணங்களையும் வயது வரம்பையும் சரிபார்த்து தயாராக இருக்கலாம்.