fbpx

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலெர்ட்..!! மக்களே உஷார்..!! மிக கனமழை வெளுத்து வாங்கும்..!!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களுக்கு 22,23 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களுக்கு 22, 23 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரக்கூடிய நிலையில், வரும் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவின் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அன்றைய தினங்களில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு..!! த்ரிஷா விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை..!!

Mon Nov 20 , 2023
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த மாதம் 19ஆம் தேதி வெளியானது. த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில், மன்சூர் அலிகான் விஜய்யின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தார். இதற்கிடையே, சமீபத்தில் […]

You May Like