இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்..
தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.
நாளை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறு நாள், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 10-ம் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 11,12 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : பறவை மோதியதால் சென்னை – கொழும்பு விமானம் ரத்து.. பாதுகாப்பாக தரையிறங்கிய 158 பயணிகள்!