ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டாசு உற்பத்தி நிலையத்தில் புதன்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராகுல் மீனா இதுகுறித்து கூறியதாவது: “இந்த பட்டாசு உற்பத்தி ஆலை உரிமம் பெற்றது. தற்போது ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்,” என்று அவர் தெரிவித்தார்.
சம்பவ இடம் முழுவதும் சிதறி கிடந்த வெடிபொருட்கள் காரணமாக மீட்பு பணிகள் சிரமமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசுகளை தவறாக கையாண்டதால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
Read more: 11 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மரணம்! பயங்கரவாதிகளுடன் நடந்த கடும் மோதல்..



