காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக் கோரி இன்று சென்னை எழும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாடம் நடைபெற்றது.. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்.. அப்போது “ காசாவில் உலகமே பார்க்க இஸ்ரேல் நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியது! எங்கோ நடக்கிறது என்று உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியா இந்த விவகாரத்தில் கண்மூடி இருக்கக் கூடாது. பாலஸ்தீனத்தைத் தொடக்கத்திலேயே அங்கீகரித்த கொள்கையுடைய இந்தியா மீண்டுமொருமுறை வரலாற்றில் சரியான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது. இதற்காக ஒன்றிய அரசை வலியுறுத்தி, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும்! மனிதம் காப்போம்!” என்று தெரிவித்தார். இதுகுறித்து முதல்வர் தனது எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் முதல்வரின் பதிவுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.. அவரின் பதிவில் “ கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களே? உள்ளூர் நிலைமையே ஊசலாடும் போது உலக அரசியல் உங்களுக்கு தேவைதானா? பாலஸ்தீனத்திற்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என பேசும் உங்களால் வேங்கைவயல் போன்ற கொடுமைகளில் இருந்து மக்களை விடுவிக்க முடியவில்லையே ஏன்? கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த நீங்கள் காஸாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகசிறந்த நகைச்சுவை!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : கரூர் துயரம்.. “இதற்காகவே அமைதி. என் மீதான அவதூறுகளை நம்பாதீங்க..” தலைமறைவானதாக கூறப்படும் ராஜ்மோகன் பதிவு!