2025-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு.. யார் யார் தெரியுமா?

nobel chemistry

2025-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது..

உலகளவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.. நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் யார் என்பது அறிவிக்கப்படும்.


அந்த வகையில் இதுவரை மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.. அதன்படி மனித உடலில் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான கண்டுபிடிப்புக்கு 3 பேருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.. இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் என 3 பேருக்கும் இந்த நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.. ஒரு மின்சார சுற்றுவட்டத்தில் மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் இயந்திர சுரங்கப்பாதை மற்றும் ஆற்றல் அளவீட்டைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் 2025-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.. சுசுமூ கிட்டாகாவா, ரிச்சர்டு ராப்சன், ஒமர் எம்.யாகி ஆகியோருக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்காவை சேர்ந்த இந்த மூவருக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலோக கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான ஆரோய்ச்சிக்காக விஞ்ஞானிகள் மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

“உலோக-கரிம கட்டமைப்புகளின் மேம்பாட்டிற்காக” சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் எம். யாகி ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை வழங்க ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி முடிவு செய்துள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : 11 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மரணம்! பயங்கரவாதிகளுடன் நடந்த கடும் மோதல்..

English Summary

The 2025 Nobel Prize in Chemistry has been jointly awarded to three people.

RUPA

Next Post

தனி கட்சி தொடங்கும் அண்ணாமலை..? கை கோர்க்கும் முக்கிய புள்ளிகள்.. NDA கூட்டணியில் விரிசல்..?

Wed Oct 8 , 2025
Annamalai to start a separate party..? Key points for joining hands.. Cracks in the NDA alliance..!
Annamalai K BJP

You May Like