மதுரையில் உள்ள அமச்சியாபுரம் கிராமத்தின் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட வாடிப்பட்டி ஒன்றியம் கருப்பட்டி ஊராட்சி அமச்சியாபுரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. குடிநீரில் துர்நாற்றம் வந்ததை அடுத்து மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் ஏறிச்சென்று பார்த்த போது மலம் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது..
இதனால் 2 நாட்களாக குடிநீர் இன்றி அந்த கிராம மக்கள் தவித்து வருகின்றனர். ஊராட்சி செயலாளருக்கு தகவல் தெரிவித்தும் மேல் நிலை தொட்டியை சுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் மதுரை ஆட்சியர் நேரடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமச்சியாபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யார் இந்த செயலில் ஈடுபட்டது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தங்கள் பகுதி மக்களுக்கு எந்த நோய்களும் ஏற்படாத வண்ணம் மருத்துவ குழுவை அமைத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.. அமச்சியாபுரத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில், கிராம மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
Read More : 41 பேரை காவு வாங்கி ஜனநாயகன் பட ஷூட்டிங் நடத்திய விஜய்? நக்கீரன் கோபால் சொன்ன பகீர் தகவல்..!



