fbpx

சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு..!! நவ.30ஆம் தேதியே கடைசி..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே முந்துங்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டக் குழந்தைப் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள சமூகப் பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நவம்பர் 30ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த பணியிடம் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மாதம் ஒன்றிற்கு ரூ.18,536/- வரை தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு 10, 12ஆம் வகுப்புடன் சமூகப்பணி/சமூகவியல் / சமூக அறிவியில் ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி தொடர்பான பணிகளில் ஏற்கனவே பணிபுரிந்திருப்பின் முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும், 42 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கக் கூடாது. மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள், chengalpattu.nic.in என்ற மாவட்ட இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து கல்வி, வயது மற்றும் முன் அனுபவம் குறித்த சான்றிதழ்களின் நகல்களுடன் நவ.30ஆம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி;

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். A80, 10வது குறுக்குத் தெரு, அண்ணாநகர், செங்கல்பட்டு – 603001

Chella

Next Post

வெட்கம், மானம் இருந்தா தூக்கு மாட்டி சாவு..!! மகளிர் ஆணையத்தை கிழித்த மன்சூர் அலிகான்..!!

Tue Nov 21 , 2023
நடிகை திரிஷா குறித்து கேவலமாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. தற்போது அதுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. லியோ படத்தில் திரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும், நடிகை குஷ்பூ, ரோஜாவை மாதிரி கட்டிலில் தூக்கி போடலாம் என நினைத்தேன் என்று மிகவும் அசிங்கமாக பேசினார் மன்சூர் அலிகான். இதனால் கடும் கோபத்திற்கு ஆளான நடிகை திரிஷா, மன்சூர் அலிகானுக்கு கண்டனம் […]

You May Like