கடந்த 2023ஆம் ஆண்டு அக்.7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து, நிலைமை மிகவும் பதற்றமாகவே உள்ளது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காசாவில் ஹமாஸ் அமைப்புகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களால் 64,700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியான தாக்குதல்களின் காரணமாக, காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் உணவு, இருப்பிடம், உடை என எந்தவித அடிப்படை வசதியும் இன்றி கடும் துன்பத்தில் வாடுகின்றனர். குறிப்பாக, குழந்தைகளும் பெண்களும் பசியிலும் பாதுகாப்பற்ற சூழலிலும் தவிக்கின்றனர். அடிப்படைத் தேவைகள் முற்றிலும் இல்லாத நிலையில் உள்ள இந்தப் பெண்களுக்குக் கூடுதலாக ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக வரும் சில ஆண்களால், உதவியை நாடும் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உதவி செய்ய வரும் ஆண்கள், சம்பந்தப்பட்ட பெண்களின் தொலைபேசி எண்களைப் பெற்றுக் கொண்டு தவறான நோக்கத்துடன் அவர்களைத் தொடர்பு கொள்வதாகவும் கூறப்படுகிறது. போர்ச்சூழல் மற்றும் அடிப்படைத் தேவையின்மை ஆகிய இருமுனை நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் காசா பெண்களுக்கு, உதவிகள் என்ற பெயரில் இத்தகைய பாலியல் அச்சுறுத்தல்களும் ஏற்படுவது சர்வதேச அளவில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : இதை மட்டும் மாற்றினால் உடனே 3 கிலோ வரை உடல் எடை குறையும்..!! செம ரிசல்ட்..!! டிரை பண்ணி பாருங்க..!!



