டெல்லியின் மதங்கிர் பகுதியில் தினேஷ் – சாதனா என்ற தம்பதி வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.. சாதனா தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.. இந்த நிலையில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த தனது கணவர் மீது சாதனா கொதிக்கும் எண்ணெயை ஊற்றி, பின்னர் அவர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளார்.
தனது 6 மாத மகள் அருகில் தூங்கிக் கொண்டிருந்த போது சாதனா இந்த கொடுஞ்செயலை செய்துள்ளார்.. பாதிக்கப்பட்டகணவர் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளார், மேலும் அவர் சஃப்தர்ஜங் மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினேஷின் அலறல் சத்தத்தால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரின் வீட்டை தட்டி உள்ளனர்.. ஆனால் சாதனா கதவை திறக்க மறுத்துவிட்டார். இந்த சம்பவம் அக்டோபர் 2 ஆம் தேதி அதிகாலை 3:15 மணியளவில் நடந்தது என்று எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உரிமையாளரின் மகள் அஞ்சலி இதுகுறித்து பேசிய போது “சம்பவம் நடந்த நாளில், தினேஷ் அலறும் சத்தம் கேட்டது. நாங்கள் மாடிக்குச் சென்றபோது, அவரது மனைவி கதவைத் திறக்கவில்லை, அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரது மனைவி சூடான எண்ணெயை ஊற்றி, மிளகாய் பொடியை தடவியதாகவும் அவர் தொடர்ந்து கூறி வந்தார்.
எனது தந்தை தினேஷின் மைத்துனரை அழைத்த பிறகுதான் அவர் மருத்துவமனைக்கு விரைந்தார். அவர்கள் ஏழு மாதங்களுக்கு முன்பு எங்கள் வீட்டிற்கு குடிபெயர்ந்தனர்,” என்று கூறினார்.
தரை தளத்தில் வசிக்கும் மற்றொரு குடியிருப்பாளர் மஞ்சு பேசிய போது, “நாங்கள் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டிற்கு குடிபெயர்ந்தோம். மேல் தளத்தில் வசிக்கும் குடும்பத்தினர் சண்டையிட்டதாகவும், மனைவி தனது கணவர் மீது சூடான எண்ணெயை ஊற்றி, மிளகாய் பொடியை போட்டதாகவும் பின்னர் கேள்விப்பட்டோம். எங்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.” என்று தெரிவித்தார்..
அக்டோபர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், தினேஷ் தூங்கச் செல்வதற்கு முன்பு அவர்கள் இருவருக்கும் இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.. பின்னர் சாதனா ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அவர் மீது ஊற்றி உள்ளார். இதனால் தினேஷ் அலறி துடித்துள்ளார்.. வீட்டு உரிமையாளர் தனது மைத்துனரை அழைத்த பிறகுதான் சாதனா கதவைத் திறந்தார். அவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் 2 ஆம் தேதி அதிகாலையில் மதன் மோகன் மாளவியா மருத்துவமனையில் இருந்து மருத்துவ-சட்ட வழக்கு அறிக்கையைப் பெற்ற பிறகு போலீசார் விசாரணையைத் தொடங்கினர். பின்னர் அவரது உடல்நிலையின் தீவிரம் காரணமாக அவர் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்..
மருத்துவ பிரதிநிதியாக பணிபுரியும் தினேஷ், தது மருத்துவமனையில் இருந்து தனது வாக்குமூலத்தை வழங்கினார். அதில் “ எனது உடலில் சூடான எண்ணெய் ஊற்றப்பட்டபோது அவருக்கு எரிச்சல் ஏற்பட்டது, பின்னர் எழுந்தபோது அவரது மனைவி அருகில் மிளகாய்ப் பொடியுடன் நிற்பதை பார்த்தேன், பின்னர் அவர் மிளகாய்ப் பொடிய என் மீது வீசினார். நான் கத்தி கூச்சலிட்டால் மேலும் எண்ணெய் ஊற்றுவேன் என என் மனைவி மிரட்டினார்..” என்று தெரிவித்தார்..
தினேஷ் – சாதனாவுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.. பின்னர் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் சமரசம் செய்து வைத்ததால் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து அம்பேத்கர் நகர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
Read More : மாமியாருக்கும் மருமகனுக்கும் தகாத உறவு.. கண்டித்த மனைவிக்கு நேர்ந்த கதி..!! பகீர் சம்பவம்..