“நான் கர்ப்பமா இருக்கேன்”..!! கள்ளக்காதலி வீட்டுக்கு ஓடி வந்த கள்ளக்காதலன்..!! பின்னாலேயே வந்த கணவன்..!! அடுத்து நடந்த ட்விஸ்ட்..!!

Sex 2025 2 1

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் உன்சூர் தாலுகாவில் உள்ள மூக்கனஹள்ளி கிராமத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. விஜய் (35) என்பவரின் மனைவி கீதா (28), கள்ளக்காதலைத் தொடர்ந்த நிலையில், ஆத்திரமடைந்த கணவன், அவரை வெட்டிக் கொலை செய்தார். மேலும், கீதாவின் கள்ளக்காதலன் திலீப்பின் (32) காலையும் உடைத்து கொடூரமாக தாக்கியுள்ளார்.


போலீஸ் கூற்றுப்படி, கீதாவுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த திலீப்புக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்த உறவு குறித்து கணவர் விஜய் தெரியவந்த நிலையில், அவர் கீதாவை கண்டித்துள்ளார். ஆனால், அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை. இந்நிலையில், இரவு விஜய் வெளியே சென்றதை அறிந்த கீதா, தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி திலீப்பை வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாகத் திரும்பி வந்த விஜய், வாசலில் இருந்த ஆணின் காலணியைக் கண்டு சந்தேகமடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, மனைவி கீதா காதலனுடன் ஆடைகள் இல்லாமல் இருந்ததைக் கண்டு கோபத்தின் உச்சத்திற்குச் சென்றார். “பலமுறை சொல்லியும் திருந்தவில்லை” எனக் கூறி கீதாவை கடுமையாகத் தாக்கிய விஜய், அங்கிருந்த அரிவாளை எடுத்து வந்து கீதாவின் முகத்திலும் உடலிலும் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதில் அதிர்ச்சியடைந்த கள்ளக்காதலன் திலீப், தப்பி ஓட முயன்றபோது, விரட்டிச் சென்ற விஜய், திலீப்பின் காலில் சரமாரியாகத் தாக்கி முறித்தார். இதையடுத்து, கிராம மக்கள் விரைந்து வந்து திலீப்பை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீதா கர்ப்பிணியாக இருந்ததால், இந்தச் சம்பவம் மூக்கனஹள்ளி கிராமத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, போலீசார் வழக்குப் பதிவு செய்து, விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read More : ஓய்வு காலத்தில் உங்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் வேண்டுமா..? அப்படினா இந்த மாதிரி பிளான் பண்ணுங்க..!!

CHELLA

Next Post

“ அவர்களுக்கு அமைதியை விட அரசியல் தான் முக்கியம்..” ட்ரம்புக்கு கிடைக்காத பரிசு.. நோபல் குழுவை சாடிய வெள்ளை மாளிகை!

Fri Oct 10 , 2025
 2025-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.. வெனிசுலாவில் ஜனநாயக உரிமைக்காக போராடிய வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தான் இதுவரை 8 உலகளாவிய போர்களை தீர்த்து வைத்ததற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில் தற்போது மரியா கொரினாவுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு […]
donald trump nobel peace prize 2025 1760060511

You May Like