Flash : காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலையும் புதிய உச்சம்!

jewels

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000, ரூ.87,000, ரூ.88,000, ரூ.89,000 என உச்சம் தொட்டு வந்தது.. கடந்த வாரமும் தங்கம் விலை உயர்வதும் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அதே போல் இந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது.. தங்கம் விலை கடந்த 4 நாட்களில் ரூ.3,900 வரை உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

இன்று காலை சவரனுக்கு ரூ.1320 குறைந்த தங்கம் விலை தற்போது மாலையில் உயர்ந்துள்ளது. அதன்படி தற்போது ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.11,340க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.90,720-க்கு விற்பனையாகிறது.. .

ஆனால் இன்று காலை ரூ.3 உயர்ந்த வெள்ளி விலை மாலையிலும் உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் ரூ. 4 உயர்ந்து ரூ.184க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,84,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளி விலை இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம் தொட்டுள்ளது..

Read More : இந்த நாடுகளில் இந்தியாவை விட தங்கம் விலை மிகக் குறைவு..! அதுவும் இவ்வளவா?

RUPA

Next Post

கழிப்பறையை விட பல மடங்கு கிருமிகள் வீட்டில் இங்குதான் இருக்கு.. உஷாரா இருங்க..!!

Fri Oct 10 , 2025
There are many times more germs in the house here than in the toilet.. Be careful..!!
Toilet 2025 1

You May Like