கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, மாடல் மஹைகா சர்மாவை டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, மாடல் மற்றும் நடிகை மஹிகா சர்மாவுடனான தனது உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் தனது விடுமுறையின் போது எடுத்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார், அதில் அவரும் மஹிகாவும் கடற்கரையில் நிற்பது போல் காட்டப்பட்டுள்ளது. புகைப்படத்துடன், ஹர்திக் தனது காதலியின் பெயரை மட்டுமே எழுதினார், வேறு எதையும் எழுதவில்லை. ஆனால் இந்த புகைப்படம் அவர்களின் புதிய உறவின் கதையை தெளிவாகக் கூறுகிறது.
ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள புகைப்படம் பின்னால் இருந்து எடுக்கப்பட்டது. இருவரும் கடற்கரையை காதல் ரீதியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஹர்திக் கருப்பு சட்டை மற்றும் ஷார்ட்ஸ் அணிந்துள்ளார், அதே நேரத்தில் மஹிகா புகைப்படத்தில் வெள்ளை சட்டையில் காணப்படுகிறார்.
முன்னதாக, ஹர்திக் பாண்டியா – மஹைகா சர்மா ஆகியோர் மும்பை விமான நிலையத்தில் ஒன்றாக தென்பட்டுள்ளனர். அதன் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இருவரும் மேட்சிங்காக கருப்பு நிற ஆடையை அணிந்திருந்தனர்.இருவரும் பொதுவெளியில் தென்படுவது இதுதான் முதல்முறை. ஆனால், இப்போது வரை இருவருமே தங்களின் உறவு குறித்து உறுதிப்படுத்தவில்லை. இருவரும் ஒரே நிறத்தில் ஆடைப்போட்டுக்கொண்டு, ஜோடியாக சுற்றித் திரிவதுதான் ரசிகர்களை கிசுகிசுக்க வைத்திருக்கிறது.
மஹிகா சர்மா யார்? மஹிகா சர்மா தொழில் ரீதியாக ஒரு மாடல் மற்றும் நடிகை. மணீஷ் மல்ஹோத்ரா, அனிதா டோங்ரே மற்றும் தருண் தஹிலியானி போன்ற ஃபேஷன் டிசைனர்களுக்காக அவர் மேடையில் நடந்து வந்துள்ளார். 2024 இந்திய ஃபேஷன் விருதுகளில் ஆண்டின் சிறந்த மாடல் (புதிய யுகம்) விருதை வென்ற மஹிகா, பொருளாதாரம் மற்றும் நிதித்துறையில் பட்டம் பெற்றுள்ளார்.
ஹர்திக் பாண்டியா – நடாஷா ஆகியோருக்கு 2020ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. தொடர்ந்து, கொரோனா காலகட்டம் முடிந்து 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உதய்பூரில் பிரம்மாண்ட திருமணமும் நடந்தது. இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் உள்ளார் இவர்கள் கடந்த 2024ஆம் ஆண்டில் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மறுபுறம், மஹைகா சர்மா மாடலிங்கில் கொடிக்கட்டி பறந்தாலும் கூட, கல்வியிலும் சிறந்து விளங்குபவர். பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். தொடர்ந்து, மாடலிங் மற்றும் திரைப்படங்களில் கவனம் செலு்ததி வருகிறார்.