சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.91,400-க்கு விற்பனையாகிறது.
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000, ரூ.87,000, ரூ.88,000, ரூ.89,000, ரூ.90,000 என உச்சம் தொட்டு வந்தது.. கடந்த வாரமும் தங்கம் விலை உயர்வதும் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அதே போல் இந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது..
இந்த நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1280 உயர்ந்து ரூ.92,000ஐ கடந்துள்ளது.
இன்று காலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்த தங்கம் விலை மாலையில் ரூ.600 உயர்ந்துள்ளது.. அதன்படி தற்போது ஒரு கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ரூ.11,500க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.92,000-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் ரூ. 3 உயர்ந்து ரூ.187க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,87,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளி விலை இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம் தொட்டுள்ளது..