தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. முக்கிய தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய், சீமான் என 4 முனைப்போட்டி நிலவிய நிலையில் கரூர் சம்பவத்திற்கு பின் கூட்டணி கணக்குகள் மாறத் தொடங்கி உள்ளது.. அதிமுக பாஜக கூட்டணியில் விஜய் இணையக்கூடும் என்று கூறப்படுகிறது.. மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் வெளியேறிய நிலையில் இவர்கள் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகர் அரூர் அமமுக வேட்பாளரை அறிவித்துள்ளார்.. தருமபுரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் அரூர் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.ஆர். முருகன் போட்டியிடுவார் என்று அறிவித்தார்…. எம்.எல்.ஏ பதவியை தூக்கி எறிந்த ஆர்.ஆர். முருகனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.. மேலும் அமமுக கூட்டணி தான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்..
2026 சட்டமன்ற தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாக அமமுக மாறும்.. இந்த தேர்தலில் துரோகத்தை வீழ்த்த வேண்டும்.. ஆதரவளித்தவர்களை நன்றி, விசுவாசமின்றி நீக்கியவர் எடப்பாடி பழனிசாமி.. மாற்றுக் கட்சியின் கொடியை பிடிக்க வைத்து, கூட்டணிக்கு வர வேண்டும் என ஏமாற்றுகின்றனர்.. முறைகேடு, ஊழல் மட்டுமின்றி கோடநாடு வழக்கிலும் எடப்பாடி பழனிசாமி சிக்கி உள்ளார்.