fbpx

சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை ஆளுநர் நசுக்கக் கூடாது..!! உச்சநீதிமன்றம் காட்டம்..!!

சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை ஆளுநர்கள் நசுக்க கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக ஆம் ஆத்மி தலைமையிலான அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்திருந்தது. இதில், ஜூன் 19, 20 மற்றும் அக்டோபர் 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பஞ்சாப் பேரவை அமர்வுகளின் செல்லுபடி குறித்து சந்தேகம் எழுப்ப ஆளுநருக்கு சட்ட அதிகாரம் இல்லை என்று நவம்பர் 10ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.

இதன் 27 பக்கங்கள் கொண்ட விரிவான உத்தரவு உச்சநீதிமன்ற இணையதளத்தில் நேற்றிரவு பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில், “பேரவை நடவடிக்கை குறித்து சந்தேகம் எழுப்பும் எந்த முயற்சியும் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஆகும். பேரவை சிறப்புரிமைகளின் பாதுகாவலராக அரசமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பேரவைத் தலைவர், பேரவையை ஒத்திவைப்பதில் அவரது அதிகார வரம்புக்குள் சிறப்பாகச் செயல்பட்டார்.

மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநருக்கு சில அரசமைப்பு அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும், மாநில சட்டப்பேரவைகளின் சட்டம் இயற்றும் அங்கீகாரத்தை நசுக்க ஆளுநர் அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

கைதாகிறாரா அமைச்சர் பொன்முடி..? நவ.30ஆம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு..!!

Fri Nov 24 , 2023
சட்டவிரோத பணப்பரிவத்தனை வழக்கில் அமைச்சர் பொன்முடி நவம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். திமுக அமைச்சர்களை குறிவைத்து, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகிறது. அதன்படி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் கடந்த மாதம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. […]

You May Like