இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் அகமதாபாத்தில் உள்ள ஃபிசிக்கல் ரிசர்ச் லேபரட்டரி (Physical Research Laboratory – PRL) நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் மற்றும் பிற தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் விவரம் :
இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் பணியிடங்கள் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கணினி அறிவியல்/ஐடி, மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பிரிவுகளில் உள்ளன. இத்துடன், ஃபிட்டர், டர்னர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், எலக்ட்ரீஷியன், பிளம்பர் உள்ளிட்ட தொழில்நுட்பப் பிரிவுகளிலும் பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு :
டெக்னிக்கல் அஸிஸ்டண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, சம்பந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இதர தொழில்நுட்பப் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு முடித்ததுடன் தொடர்புடைய பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பைப் பொறுத்தவரை, 31.10.2025 தேதியின்படி 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி, எஸ்.சி / எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் மற்றும் தேர்வு முறை :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மத்திய அரசின் 7வது ஊதியக் கமிஷன் படி, மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு எழுதிய பின் ரூ.500 திரும்ப வழங்கப்பட்டுவிடும். இருப்பினும் எஸ்சி/எஸ்டி, பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2025 ஆகும். மேலும் விவரங்களுக்கு https://www.prl.res.in/OPAR/assets/pdfs/0225.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
Read More : ஒரே வீட்டில் தீபாவளி கொண்டாடும் CM ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, விஜய்..!! வைரலாகும் வீடியோ..!!