fbpx

“கண்ட கண்ட ஆளெல்லாம் புத்திமதி சொல்லுது… அமீருக்கு உதவியது நான்தான்…” கிரீன் ஸ்டுடியோ ஞானவேல் ராஜாவுக்கு சசிகுமார் பதிலடி.!

அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பருத்திவீரன். இந்திய சினிமாவை இந்த திரைப்படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் கார்த்தி புகழின் உச்சிக்கு சென்றார். பல தேசிய விருதுகளையும் இந்த திரைப்படம் வாங்கியது.

தற்போது தமிழ் சினிமாவில் 25 படங்கள் நடித்திருக்கிறார் கார்த்தி. இதனை கொண்டாடும் விதமாக சமீபத்தில் அவரது ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது கார்த்தி 25 என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அவர் நடித்த படங்களின் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். ஆனால் அவரை வைத்து முதல் படம் இயக்கிய அமீர் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக சினிமா வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மாய வலை பிரஸ் மீட்டில் பேசிய இயக்குனர் அமீர் பருத்திவீரன் திரைப்படத்தின் போது கார்த்தி அமீர் மற்றும் அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளராக கூறப்படும் ஞானவேல் ஆகியோருடைய அந்த பிரச்சனை பற்றி மனம் திறந்து பேசி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருந்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீர் பணத்தை எடுத்து விட்டு போய் கணக்கு கூறியதாக பேட்டியில் தெரிவித்திருந்தார்.

தற்போது இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும் நடிகருமான சசிகுமார். இது தொடர்பாக பேசியிருக்கும் சசிகுமார் பருத்திவீரன் திரைப்படத்தின் இறுதி கட்டங்களில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது நானும் எனது உறவினர் மற்றும் மறைந்த தயாரிப்பாளரான ஒருவரும் இயக்குனர் அமீருக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் கொடுத்து உதவியதாக தெரிவித்திருக்கிறார். மேலும் படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தங்களுக்கு பணம் செட்டில் செய்யப்படாமலேயே ரிலீஸ் செய்யப்பட்டது எனவும் கூறி இருக்கிறார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீர் குறித்துக் கூறி இருக்கும் அனைத்து விஷயங்களும் பொய் என்றும் இது வன்மையான கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்திருக்கிறார்.

Next Post

"மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது… முடிந்ததை பார்த்துக் கொள்ளட்டும்." விசிக-வுக்கு குஷ்பூ சவடால் பதில்.!

Sat Nov 25 , 2023
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர் குஷ்பூ. சில காலம் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றி வந்தார். நிலையில் திடீரென பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து தற்போது மகளிர் அணி பொறுப்பில் பணியாற்றி வருகிறார். அவ்வப்போது தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழ் மக்களின் கலாச்சாரம் ஆகியவற்றை பேசி சர்ச்சைகளில் சிக்கிக் […]

You May Like