கொட்டிக் கிடந்த முதல் மனைவியின் தங்க நகைகள்..!! 2-வது மனைவிக்கு வந்த பேராசை..!! கணவருன்னு கூட பாக்கல..!! உயிரோடு எரிந்த முதியவர்..!!

Crime 2025 5

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ்ஜில் உள்ள சாம்த்ரா கிராமத்தில், பணப் பிரச்சனை காரணமாக 2-வது மனைவி தனது கணவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தனஜிபாய் என்கிற கிம்ஜிபாய் விஷ்ரம்பாய் கெராய் (60) என்ற அந்த முதியவர், தனது முதல் மனைவி இறந்த பிறகு 45 வயதுடைய ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். முதல் திருமணத்தின் மூலம் இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்களில் இருவர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். 3-வது மகன் திருமணமான நிலையில் சாம்த்ராவிலேயே தனியாக வசித்து வருகிறார். மகன்கள் தனியாக வசிப்பதால், முதியவர் இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று, முதியவர் தன்ஜிபாய்க்கும் அவரது இரண்டாவது மனைவிக்கும் இடையே பணம் கொடுப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முதியவர் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மனைவி, “இன்று நான் உன்னை உயிருடன் விடமாட்டேன்” என்று ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவர் தன்ஜிபாய் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். முதியவர் வலியால் அலறவே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து மன்குவா காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து, முதியவரின் இரண்டாவது மனைவியைக் கைது செய்தனர். மேலும், விசாரணையின்போது மற்றொரு திடுக்கிடும் தகவல் வெளியானது. முதியவர் 2-வதாக திருமணம் செய்த பிறகு, முதல் மனைவியின் தங்க நகைகளான மங்களசூத்திரம், பட்டாலா, காந்தி, மோதிரங்கள் போன்றவற்றை இரண்டாவது மனைவி எடுத்துச் சென்றது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணம் மற்றும் நகைப் பின்னணியில் நடந்த இந்த கொடூரக் கொலை அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : குழந்தைகளை கவரும் புது ரகங்கள்..!! சிவகாசி வெடியை இனி குறைந்த விலையில் வாங்கலாம்..!! எங்கு தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

CHELLA

Next Post

“இன்னொரு பஹல்காம் போன்ற தாக்குதல் நடந்தால், அவ்வளவு தான்..” பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை..

Tue Oct 14 , 2025
மேற்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் குமார் கட்டியார் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.. ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைப் போலவே பாகிஸ்தான் செயல்பட முயற்சிக்கக்கூடும்.. எல்லை தாண்டிய எந்தவொரு புதிய தாக்குதல் முயற்சியும் இந்தியாவிலிருந்து “வலுவான பதிலடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. என்றும் எச்சரித்தார். மேற்கு எல்லையில் தொடங்கப்பட்ட இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெரிய அளவிலான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை […]
western army commander warns pakistan against another pahalgam like attack 1760432891924 16 9 1

You May Like