fbpx

இளம் பெண்ணுக்கு கணவன் கண்முன் நேர்ந்த கொடூரம்.! போலீஸ் வேடத்தில் வந்த மர்ம நபர்கள் வெறிச்செயல்.!

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் ரயில் நிலையத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் போல் உடைய அணிந்து வந்த இரண்டு நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் முங்காவோலி கணவன் மற்றும் மனைவி ஜெய்ப்பூர் செல்லும் ரயிலுக்காக காத்திருந்துள்ளனர். அப்போது காவல்துறையினர் போல உடை அணிந்து வந்த இரண்டு பேர் அவர்களிடம் வந்து விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர். திடீரென அந்த இரண்டு நபர்களும் அந்தக் கணவனை தாக்கி விட்டு இளம் பெண்ணை அருகில் இருந்த புதருக்கு இழுத்துச் சென்றனர்.

அங்கு வைத்து அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் பின்னர் இருவரும் தப்பி ஓடி விட்டனர். இது தொடர்பாக அந்த பெண்ணும் அவரது கணவரும் காவல்துறையில் புகார் அளித்தனர். அவர்கள் புகார் அளித்த பின்பு தான் இந்தக் குற்றச்செய்தியில் ஈடுபட்ட இருவரும் போலி போலீசார் என தெரிய வந்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போலீசார் போல் வேடம் அணிந்து கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பாக ரயில்வே நிலையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளும் பரிசோதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

"எனது குழந்தை செய்த தவறு என்ன.?" தற்கொலை செய்து கொண்ட 16 வயது இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் தாய்… கண்ணீர் பேட்டி.!

Sun Nov 26 , 2023
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினி நகரை சேர்ந்த 16 வயதை இன்ஸ்டாகிராம் பிரபலம் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. இது தொடர்பாக சமூக கேலி குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினி நகரை சேர்ந்தவர் 16 வயதான ப்ரன்ஷு. இவர் எல்ஜிபிடிக்யூ சமூகத்தைச் சேர்ந்தவர். தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தின் மூலம் தன்னுடைய […]

You May Like