ரூ.100 கோடி மதிப்பிலான மாளிகை!. அண்ணனுக்கு எழுதி கொடுத்த விராட் கோலி!. லண்டனுக்கு நிரந்தரமாக செல்கிறாரா?.

virat kohli house

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.1050 கோடி அதிகம் ஆகும். விராட் கோலியின் முக்கிய வருமானம் கிரிக்கெட். இது தவிர, ஐபிஎல்லிலும் வருமானம் ஈட்டுகிறார். விராட் கோலி பிராண்ட் ஒப்புதல்கள் மூலம் அதிக பணம் சம்பாதித்து வருகிறார். விராட் கோலிக்கு மும்பையில் ரூ.34 கோடி மதிப்புள்ள வீடு உள்ளது. இது தவிர விராட் கோலிக்கு குருகிராமில் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. இதுமட்டுமின்றி பெப்சி, ஃபாஸ்ட்ராக், பூஸ்ட், ஆடி, எம்ஆர்எஃப், ஹீரோ போன்ற பல நிறுவனங்களிலும் விராட் கோலி முதலீடு செய்துள்ளார். கிங் கோலி முக்கியமான பல கார் கலெக்‌ஷன்களை வைத்திருக்கிறார். அவரிடம் ரூ.70 லட்சம் முதல் ரூ.2.26 கோடி வரை பல கார்கள் உள்ளன.


அதேபோல, விராட் கோலி வளர்ந்து வரும் தொழிலதிபராகவும் திகழ்கிறார். இவர் ஆரோக்கியம், பிட்னஸ் மற்றும் லைஃப்ஸ்டைல் துறைகளில் முதலீடுகளை செய்துள்ளார். அதில், ப்ளூ ட்ரைப், ராகே காஃபி, ஒன்8 மற்றும் ஹைப்ரைஸ் ஆகியவை அவரது சுய பிராண்டுகளாக ஸ்போர்ட்ஸ் ஐகான்களை கொண்டவைகளாக உள்ளன.

இந்தநிலையில், விராட் கோலி லண்டனில் குடியேற இருப்பதாக சமீக காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனை அவரது சிறுவயது பயற்சியாளரான ராஜ்குமார் சர்மா என்பவரும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதுமட்டுமல்லாமல், விராட் கோலி ஏற்கனவே தனது ஓய்வு நேரத்தில் லண்டனில் குடும்பத்துடன் சென்று பொழுதை கழித்து வருகிறார். விராட் கோலியின் இரண்டாவது குழந்தையும் லண்டனில் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்தது. இதையெல்லம் வைத்து பார்க்கும்போது அவர் லண்டனில் குடியேற முயற்சித்து வருவதாக தெரிகிறது.

இந்தநிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 19 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்துள்ளனர். . அடுத்த இரண்டு போட்டிகள் அடிலெய்டு மற்றும் சிட்னியில் நடைபெறும். இரண்டாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 23 ஆம் தேதியும், மூன்றாவது போட்டி அக்டோபர் 25 ஆம் தேதியும் நடைபெறும். இதைத் தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கும்.

இந்தநிலையில், ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு முன்னதாக, நேற்று (அக்டோபர் 14) குருகிராம் தாலுகா அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். ஏனென்றால், கோஹ்லி குருகிராமில் உள்ள DLF சிட்டி ஃபேஸ் 1 இல் ஒரு ஆடம்பரமான மாளிகையை வைத்திருக்கிறார், அதை அவர் 2021 இல் வாங்கினார். குருகிராமில் ஒரு சொகுசு பிளாட்டையும் வைத்திருக்கிறார். இரண்டு சொத்துக்களையும் இப்போது அவரது மூத்த சகோதரர் விகாஸுக்கு எழுதிக்கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்காக ஒரு மணி நேரம் குருகிராம் தாலுகா அலுவலகத்தில் விராட் கோலி இருந்துள்ளார். அப்போது, அலுவலக ஊழியர்களுடன் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிகளையும் எடுத்துக் கொண்டார்.

Readmore: “சமரசமே கிடையாது.. கோர்ட்ல பாத்துக்கலாம்”..!! மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

KOKILA

Next Post

ஃபாஸ்ட்டேக் வருடாந்தர அனுமதிச்சீட்டு பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 25 லட்சமாக உயர்வு...!

Thu Oct 16 , 2025
ஃபாஸ்ட்டேக் வருடாந்தர அனுமதிச்சீட்டு பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் ஃபாஸ்ட்டேக் வருடாந்தர அனுமதிச் சீட்டு முறைக்கு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தமுறை அறிமுகப்படுத்தப்பட்ட 2 மாதங்களில் 5.67 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. மொத்தம் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் இதை பயன்படுத்தியுள்ளனர். 2025 ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஃபாஸ்ட்டேக் வருடாந்தர அனுமதிச் சீட்டு முறை மூலம் குறைவான கட்டணத்துடன் தேசிய நெடுஞ்சாலைகளை […]
fastag 2025

You May Like